விரட்டியடித்த போலீஸ்: வாக்காளர்கள் வேதனை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
அவிநாசி:ஓட்டுச்சாவடி அருகே போலீசாரின் கெடுபிடி யால், வாக்காளர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.அவிநாசி தொகுதியில், தம்பதியராக பலரும், டூவீலரில் ஓட்டளிக்க ஓட்டுச்சாவடிக்கு வந்தனர். ஓட்டுச்சாவடி அருகே வந்த போது, அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், அவர்களை, 100 மீ., தள்ளி, டூவீலரை பார்க்கிங் செய்து வரும்படி திருப்பிஅனுப்பினர்.இதனால், வாக்காளர்களுக்கு அலைக்கழிப்பு
 விரட்டியடித்த போலீஸ்: வாக்காளர்கள் வேதனை

அவிநாசி:ஓட்டுச்சாவடி அருகே போலீசாரின் கெடுபிடி யால், வாக்காளர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.அவிநாசி தொகுதியில், தம்பதியராக பலரும், டூவீலரில் ஓட்டளிக்க ஓட்டுச்சாவடிக்கு வந்தனர். ஓட்டுச்சாவடி அருகே வந்த போது, அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், அவர்களை, 100 மீ., தள்ளி, டூவீலரை பார்க்கிங் செய்து வரும்படி திருப்பிஅனுப்பினர்.இதனால், வாக்காளர்களுக்கு அலைக்கழிப்பு ஏற்பட்டது. சேவூர் ஊராட்சி ஒன்றியப்பள்ளி ஓட்டுச்சாவடி பகுதியில், போலீசாரின் கெடுபிடி, சற்று அதிகமாகவே இருந்தது. ரோட்டின் இரு மருங்கிலும், 100 மீ., சுற்றளவுக்கு யாரையும் அனுமதிக்காமல், போலீசார் தடியை வைத்து, விரட்டிபடியே இருந்தனர்.ஓட்டுச்சாவடிக்கு மொபைல் போனுடன் வந்த வாக்காளர்களை, பணியில் இருந்த எல்லைப்பாதுகாப்பு படையினர், பரிசோதித்து, 'மொபைல் போன்களை யாரிடமாவது ஒப்படைத்து விட்டு வாருங்கள்' எனக்கூறி, திருப்பியனுப்பினர்.வாக்காளர்கள் சிலர் கூறுகையில், 'தெளிவான மனநிலையில் ஓட்டு சாவடிக்கு வரும் போது, போலீசாரின் இத்தகைய கெடுபிடி, மனரீதியாக பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும்.வாக்காளர்கள் பெரும்பாலும் சொந்த வாகனங்களில் தான் ஓட்டுச்சாவடிக்கு வருவர். அதற்கேற்ப, ஓட்டுச்சாவடிக்கு 100 மீ.,க்கு முன்பாகவே வாகனம் நிறுத்த, ஏற்பாடு செய்தால், தேவையற்ற மன உளைச்சல் இருக்காது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X