தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

ஓட்டளிக்க திரையுலகினர் ஆர்வம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை:ஜனநாயக கடமை ஆற்றுவதில், திரையுலகினர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழக சட்டசபை தேர்தலில், முதல்வர் பதவிக்கு ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி கடைசி நேரத்தில் ஒதுங்க, நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம் சார்பில், முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார்.இந்த முறை தான், சீமான், குஷ்பு, உதயநிதி, ஸ்ரீப்ரியா, சினேகன், மன்சூர் அலிகான் என,

சென்னை:ஜனநாயக கடமை ஆற்றுவதில், திரையுலகினர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழக சட்டசபை தேர்தலில், முதல்வர் பதவிக்கு ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி கடைசி நேரத்தில் ஒதுங்க, நடிகர் கமல், மக்கள் நீதி மய்யம் சார்பில், முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார்.இந்த முறை தான், சீமான், குஷ்பு, உதயநிதி, ஸ்ரீப்ரியா, சினேகன், மன்சூர் அலிகான் என, திரையுலகினர் பலர், எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நாளான நேற்று காலை முதலே, திரையுலகினர் ஓட்டளிப்பதில் மும்முரம் காட்டினர். அதிகாலையிலேயே ரஜினி, கமல், அஜித் உள்ளிட்டோர் குடும்பத்துடன் ஓட்டளிக்க வந்தனர். இவர்களைத் தொடர்ந்து, பிரபு, சத்யராஜ், சிவகார்த்திகேயன், உதயநிதி, விஜய் சேதுபதி, சூரி, தேவயானி, சிபிராஜ், நமீதா, குஷ்பு, சினேகா, பிரசன்னா, கீர்த்தி சுரேஷ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஓட்டு போட்டனர்.

மேலும், விஜய் ஆன்டனி, கருணாகரன், சித்தார்த், நாசர், அருண் விஜய், இயக்குனர்கள் ஷங்கர், டி.ராஜேந்தர், சீனு ராமசாமி, நாடக நடிகர் எஸ்.வி.சேகர் என, பலரும் வரிசையில் நின்று ஓட்டளித்து விட்டு, ஜனநாயக கடமை ஆற்றியதை சமூக வலைதளத்திலும் பதிவிட்டனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சிந்து, வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டளித்து சென்றார்.பொறுமை இழந்த அஜித்!நடிகர் அஜித் ஓட்டு போட, மனைவி ஷாலினியுடன், திருவான்மியூரில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்றார். அப்போது, ரசிகர்கள் சிலர் அவருடன், 'செல்பி' எடுக்க, சமூக இடைவெளியை பின்பற்றாமல் முட்டி மோதினர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அஜித், ரசிகர்ஒருவரின் மொபைல் போனை பிடுங்கி வைத்துக் கொண்டார். பின் சிறிது நேரம் கழித்து, 'இது போன்று செயல்படக் கூடாது' என அறிவுரை கூறி, மொபைல் போனை அவரிடமே கொடுத்து விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X