பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் 90 சதவீத கடைகள் மூடப்பட்டன

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவை முன்னிட்டு நேற்று அனைத்து தனியார், அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ராமநாதபுரத்தில் 90 சதவீத வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும், என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ராமநாதபுரம் நகர்

ராமநாதபுரம் : சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவை முன்னிட்டு நேற்று அனைத்து தனியார், அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ராமநாதபுரத்தில் 90 சதவீத வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும், என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ராமநாதபுரம் நகர் பகுதியில் 90 சதவீதத்திற்கும் மேல் கடைகள் அடைக்கப்பட்டன.எப்போதும் நெரிசலாக காணப்படும் ராமநாதபுரம் சாலைத்தெரு, வண்டிக்கார தெரு, அரண்மனை, நகைக்கடை பஜாரில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.ஆங்காங்கே சிறு டீக்கடைகள், பழச்சாறு கடைகள், பெட்டிக்கடைகள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X