வெயிலில் அமர்ந்து 'பூத் சிலிப்' வழங்கிய அலுவலர்கள்: 'இவ்ளோ தான் மரியாதையா' என ஏக்கம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
அவிநாசி:மாவட்ட வாரியாக ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், பல்வேறு அரசு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது, அவர்களுக்கு 'பூத் ஸ்லிப்' கொண்டு சென்று வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.ஆனால், தங்களுக்கு உரிய மரியாதை, ஓட்டு பதிவின் போது கிடைப்பதில்லை என, அவர்கள் ஏற்கனவே
 வெயிலில் அமர்ந்து 'பூத் சிலிப்' வழங்கிய அலுவலர்கள்: 'இவ்ளோ தான் மரியாதையா' என ஏக்கம்

அவிநாசி:மாவட்ட வாரியாக ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், பல்வேறு அரசு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது, அவர்களுக்கு 'பூத் ஸ்லிப்' கொண்டு சென்று வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.ஆனால், தங்களுக்கு உரிய மரியாதை, ஓட்டு பதிவின் போது கிடைப்பதில்லை என, அவர்கள் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தனர்.பெரிய அரசியல் கட்சியினர், ஓட்டுச்சாவடியிலிருந்து, 200 மீட்டருக்குள் அப்பால் மட்டுமே அமர்ந்து வாக்காளர்களுக்கு பூத் சிலிப்' வழங்க முடியும் என்ற நிலையில் ஓட்டுச்சாவடி வளாகத்திற்கு உள்ளேயே அமர்ந்து 'பூத் சிலிப்' வழங்கும் அதிகாரம் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு உள்ளது.இருப்பினும் பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் இவர்களுக்கு, உரிய, இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதில்லை. திறந்த வெளியில், வெயிலில் அமர்ந்தபடி பணியாற்றினர்.'தேர்தல் பணியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தங்களுக்கு, ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் இவ்வளவு தான் மரியாதை வழங்கப்படுகிறது' என, அவர்கள் புலம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X