பரமக்குடியில் மழைக்கு மத்தியிலும் ஓட்டுப்பதிவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் மழைக்கு மத்தியிலும் ஓட்டுப்பதிவு

Added : ஏப் 06, 2021
Share
பரமக்குடி : பரமக்குடி தொகுதியில் மழைக்கு மத்தியிலும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது.பரமக்குடி தி.மு.க., வேட்பாளர் முருகேசன் திணைக்குளம் கிராமம் ஆர்.சி., தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார். மேலும் முதுகுளத்துார் வேட்பாளர் கீர்த்திகா பரமக்குடி ராமலிங்க விலாஸ் தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.*பரமக்குடி தொகுதியில் காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, பல்வேறு

பரமக்குடி : பரமக்குடி தொகுதியில் மழைக்கு மத்தியிலும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது.

பரமக்குடி தி.மு.க., வேட்பாளர் முருகேசன் திணைக்குளம் கிராமம் ஆர்.சி., தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார். மேலும் முதுகுளத்துார் வேட்பாளர் கீர்த்திகா பரமக்குடி ராமலிங்க விலாஸ் தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.

*பரமக்குடி தொகுதியில் காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, பல்வேறு ஓட்டுச்சாவடிகளில் பூத் ஏஜன்ட்கள் தாமதமாக வந்தாலும், தேர்தல் அலுவலர்களுக்கு சில இடங்களில் ஓட்டுப் பதிவு இயந்திரத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு 20 நிமிடம் வரை தாமதமாக துவங்கியது.

*பரமக்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 15 பேர் களத்தில் உள்ளனர். பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பூத் ஏஜன்ட்கள் மட்டுமே காணமுடிந்தது.*மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க., நாம் தமிழர் என பல இடங்களில் பார்க்க முடியவில்லை.

*பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் உடல் வெப்பமானி பார்க்காமல் இருந்ததுடன், கையுறை, சானிடைசர் சீராக வழங்கப்படவில்லை.*திணைக்குளத்தில் 60 வயதுடைய அந்தோணி கண் தெரியாத நிலையில் தனது வாக்கை அளித்தார்.*காலை 9:00 மணிக்கு பரமக்குடி, நயினார் கோவில் ஒன்றியங்களில்15 நிமிடங்கள் வரை பலத்த மழை நீடித்தது.

*கமுதக்குடி ஓட்டுச்சாவடியில் சானிடைசர் வழங்க ஆட்கள் இன்றி, தே.மு.தி.க., வேட்பாளர் செல்வி தாமாகவே சானிடைசரை பயன்படுத்தி சென்றார்.*பரமக்குடி அருகே கீழக்கோட்டை மற்றும் பரமக்குடி நகராட்சி மஞ்சள் பட்டினம் ஓட்டுச்சாவடியில் ஓட்டு இயந்திரம் பழுதானால் மாற்று இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X