பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் நாளில் திருப்பூர் வெறிச்சோடியது!

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:தேர்தல் ஓட்டுப்பதிவு நாளான நேற்று, வழக்கமான பரபரப்பின்றி நகரம் வெறிச்சோடியது.தொழிலாளர் துறை சார்பில், பனியன் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு, தேர்தல் நாளில், தொழிலாளர்கள் ஓட்டு போட வாய்ப்பளிக்கும் விதமாக, ஒருநாள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்; மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்திருந்தது.அதன்படி, திருப்பூரில்
 தேர்தல் நாளில் திருப்பூர் வெறிச்சோடியது!

திருப்பூர்:தேர்தல் ஓட்டுப்பதிவு நாளான நேற்று, வழக்கமான பரபரப்பின்றி நகரம் வெறிச்சோடியது.தொழிலாளர் துறை சார்பில், பனியன் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு, தேர்தல் நாளில், தொழிலாளர்கள் ஓட்டு போட வாய்ப்பளிக்கும் விதமாக, ஒருநாள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்; மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்திருந்தது.அதன்படி, திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மளிகை கடைகள், ஜவுளி கடைகள், நகை கடைகள், பர்னிச்சர் கடைகள், ஓட்டல்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.மாநகர பகுதிக்குள் நெரிசல் மிகுந்த பகுதிகளான பி.என்., ரோடு, அவிநாசி ரோடு, மங்கலம் ரோடு, குமரன் ரோடு, காங்கயம் ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், வாகனங்கள் போக்குவரத்து மிக குறைவாக காணப்பட்டது.கட்சி அலுவலக பகுதிகள் மற்றும் ஓட்டுச்சாவடி மையங்கள் இருந்த பகுதிகளில் மட்டுமே, மக்கள் கூட்டம் சொற்பமாக காணப்பட்டது. ஆங்காங்கே சில இடங்களில், பேக்கரி, டீக்கடைகள் மற்றும் பெட்டி கடைகள் மட்டுமே திறந்திருந்தன.வழக்கமாக, வாகன இரைச்சல் மிகுந்து காணப்படும், திருப்பூர் நகரின் பிரதான ரோடுகள், நேற்று வெறிச்சோடியது. ஓட்டல்கள் இல்லாததால், ஆங்காங்கு வேன்கள் மற்றும் தள்ளுவண்டிகளில், தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என, பொட்டல சாப்பாடு விற்பனை ஜோராக நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X