பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை 'ஜோர்': தேர்தல் கமிஷன் நடவடிக்கை; மக்கள் மகிழ்ச்சி

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழலில், ஓட்டு சாவடி மையங்களில் கொரோனா தடுப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த தேர்தல் கமிஷனின் நடவடிக்கையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.தமிழகத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது; ஓட்டு சாவடி மையங்களுக்கு ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்கு, கொரோனா தொற்று பரவாத வகையில், தேர்தல் கமிஷன் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை
 கொரோனா தடுப்பு நடவடிக்கை 'ஜோர்': தேர்தல் கமிஷன் நடவடிக்கை; மக்கள் மகிழ்ச்சி

திருப்பூர்:கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழலில், ஓட்டு சாவடி மையங்களில் கொரோனா தடுப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த தேர்தல் கமிஷனின் நடவடிக்கையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.தமிழகத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது; ஓட்டு சாவடி மையங்களுக்கு ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்கு, கொரோனா தொற்று பரவாத வகையில், தேர்தல் கமிஷன் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று செய்திருந்தது.ஓட்டு சாவடிக்குள் வரும் வாக்காளர்களை, சரியான இடைவெளி விட்டு நிற்க செய்வது, அவர்களது உடல் வெப்ப நிலையை அளவீடு செய்வது, கைகளை சுத்தப்படுத்திகொள்ள சானிடைசர் வழங்குவது, வலது கைக்கு கையுறை அணிய தருவது, ஓட்டுபோட்டு வந்த பின், கையுறையை கழற்ற அறிவுறுத்துவது என, அனைவரையும் கொரோனா தொற்று ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஓட்டு சாவடி மையங்களில் இப்பணியில் ஈடுபட்ட கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன், அக்கறையாக நடந்து கொண்டது ஓட்டு போட வந்த பலரையும் மகிழ்ச்சிபடுத்தியது.நேற்று கடுமையான வெயில் இருந்ததால், மதிய வேளைகளில், வெயிலில் வந்த சிலருக்கு உடல்வெப்ப நிலை சற்று அதிகமாக இருந்தது. எனினும், அவர்களை உடனடியாக திருப்பி அனுப்பாமல், அங்கேயே சிறிது நேரம் காத்திருக்க செய்து, அதன்பின் உடல் வெப்ப நிலை அளவீடு செய்து, அதன்பின்பு ஓட்டு சாவடிக்குள் செல்ல, தன்னார்வலர்கள் அனுமதித்தனர்.கொரோனா பாதித்து, குணமடைந்து கண்காணிப்பில் இருப்பவர்கள், கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பவர்கள், கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், தங்களை தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு, மாலை 6:00 முதல், இரவு 7:00 மணி வரை, அவர்களுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கி, ஓட்டு போட வாய்ப்பளித்த தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை, பலரும் பாராட்டவே செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X