ஓட்டுப்பதிவு இயந்திரம் மக்கர் : உடனே சீரமைத்ததால் நிம்மதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரம் 'மக்கர்' : உடனே சீரமைத்ததால் நிம்மதி

Added : ஏப் 06, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம், 32 இடங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி சரி செய்யப்பட்டது.அவ்வகையில், தாராபுரம் தொகுதியில், நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடி மையங்களில், பேட்டரி கோளாறு; 'விவி பேட்' பிரச்னைகளால், பத்து மெஷின்கள் உடனடியாக மாற்றப்பட்டன. முன்னரே கோளாறு கண்டறியப்பட்டதால், ஓட்டுப்பதிவு தாமதம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம், 32 இடங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி சரி செய்யப்பட்டது.அவ்வகையில், தாராபுரம் தொகுதியில், நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடி மையங்களில், பேட்டரி கோளாறு; 'விவி பேட்' பிரச்னைகளால், பத்து மெஷின்கள் உடனடியாக மாற்றப்பட்டன. முன்னரே கோளாறு கண்டறியப்பட்டதால், ஓட்டுப்பதிவு தாமதம் தவிர்க்கப்பட்டது. சி.எஸ்.ஐ., பள்ளியில், ஓட்டுச்சாவடி எண்: 159ல், இயந்திரம் பழுதடைந்ததால், அரை மணி நேரம், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட, பொங்கலுார், சேமலை கவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடி எண், 361 ல், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது; இதனால், காலை, 7:40 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட புனித தோமையர் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடி எண், 222 ல், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. காலை, 10:20 மணிக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு, நிறுத்தப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டு, மீண்டும் 10:40 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X