சென்னை:ஓட்டுச்சாவடிக்கு சைக்கிளில் வந்த நடிகர் விஜயால், நீலாங்கரை ஓட்டுச்சாவடி பரபரப்புக்கு உள்ளானது.சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் வசிக்கும் நடிகர் விஜய், வீட்டில் இருந்து, கபாலீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஓட்டுச்சாவடிக்கு, முக கவசத்துடன் சைக்கிளில் வந்தார்.
போலீஸ் பாதுகாப்புடன், ரசிகர்கள் புடை சூழ வந்த விஜயுடன், 'செல்பி' எடுக்க, அவரது ரசிகர்கள், 'பைக்'கில் பின்தொடர்ந்தனர்.ஓட்டு போட்ட பின், ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால், விஜய், ரசிகர் ஒருவரது பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து, வீட்டுக்கு புறப்பட்டார். ரசிகர்களை கலைக்க, போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
விஜயின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'விஜய் ஓட்டு போட சைக்கிளில்போனதற்கு, ஒரே காரணம் தான். ஓட்டுச்சாவடி, அவரது வீட்டின் பின் பகுதியில் இருந்தது. 'தவிர, அத்தெருவில், கார் நிறுத்தும் அளவுக்கு வசதியும் இல்லை. அதனால் தான், விஜய் சைக்கிளில் சென்றார். மற்றபடி, எந்த காரணமும் இல்லை' என்றார்.படம் : காளீஸ்வரன், செய்தி இல்லை கொட்டிவாக்கம் ஆண்டனி பள்ளியில் வாக்களித்த சரத்குமார் மற்றும் ராதிகா..
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE