பொது செய்தி

தமிழ்நாடு

'ஜனநாயக கடமையாற்றியதில் மகிழ்ச்சி'

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஜனநாயக திருவிழாவில், இளம் வாக்காளர்கள் பட்டியலில் இணைந்து, முதன்முறையாக தங்களது பங்களிப்பை செலுத்தியுள்ளனர். அதாவது, தமிழக அரசை நிர்மாணிப்பதில், தங்களது ஓட்டுரிமையை செலுத்தி, அதற்கு அடையாளமாக, விரலில் மை வைத்துக்கொண்டதை, 'செல்பி' எடுத்து, நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.சஞ்சு விகாசினி, ெஷரீப் காலனி.முதல் தடவையாக ஓட்டளித்தது, புதிய அனுபவமாக
 'ஜனநாயக கடமையாற்றியதில் மகிழ்ச்சி'

திருப்பூர்:ஜனநாயக திருவிழாவில், இளம் வாக்காளர்கள் பட்டியலில் இணைந்து, முதன்முறையாக தங்களது பங்களிப்பை செலுத்தியுள்ளனர். அதாவது, தமிழக அரசை நிர்மாணிப்பதில், தங்களது ஓட்டுரிமையை செலுத்தி, அதற்கு அடையாளமாக, விரலில் மை வைத்துக்கொண்டதை, 'செல்பி' எடுத்து, நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.சஞ்சு விகாசினி, ெஷரீப் காலனி.முதல் தடவையாக ஓட்டளித்தது, புதிய அனுபவமாக மகிழ்ச்சியாக இருந்தது. இளைஞர்களுக்கான அரசு அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், முதல் ஓட்டை செலுத்தியிருக்கிறேன்.காமாட்சி அபிராமி, திருப்பூர்.முதன் சந்தோஷமாக உள்ளது. அமையக்கூடிய ஆட்சி, நல்லாட்சியாக அமைய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு தகுதியான அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை, புதியதாக அமைய உள்ள அரசு, எடுக்க வேண்டும்.வேதவர்ணா, பாரப்பாளையம்.எனது ஜனநாயக உரிமையை பெற்றிருக்கிறேன். ஜனநாயக கடமையை செய்திருக்கிறேன். நல்ல நிர்வாகம் செய்ய கூடிய அரசு அமைய வேண்டும். மக்களின் உரிமைகளை பூர்த்தி செய்ய வேண்டும்; மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.ஸ்வனிகா, வாலிபாளையம்.தமிழகத்தில் நல்லாட்சி வர வேண்டும் என்ற நம்பிக்கையில், ஓட்டை செலுத்தியிருக்கிறேன். அரசின் திட்டங்கள் அனைத்தும், மக்களை எளிதாக சென்றடைய வேண்டும். மக்களுக்கான நல்ல திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும்.ஆனந்தகுமார், அவிநாசி.ஜனநாயக கடமையாற்றியதை பெருமையாக கருதுகிறேன், என்பதை காட்டிலும் கடமை என்ற உணர்வே மேலோங்குகிறது. எவ்வித பாகுபாடு, பாரபட்சமின்றி, நல்லது செய்யும் வாக்காளர்களை தேர்வு செய்ய வேண்டும்.கார்த்திகா, ஆட்டையாம்பாளையம்.ஓட்டளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், எனது பங்கும் உள்ளது என்னும் போது, பெருமையாக இருக்கிறது. மக்களுக்கான அரசாங்கம் அமைய வேண்டும்.ஜெகநாதன், பட்டம்பாளையம்.கல்லுாரி சென்று படிக்கும் போதுான், எதிர்காலம் எப்படி அமைத்துக்கொள்ள வேண்டுமென யோசிக்கிறோம். அப்போதுதான், நமக்கான அரசு எப்படி அமைய வேண்டுமென சிந்திக்கிறோம். வாக்குரிமை என்பது, மதிப்பில்லாத சொத்து. 500 ரூபாய்க்கு அடகு வைத்து விடக்கூடாது.தீபிகா பாய், திருப்பூர்.முதன்முதலாக தேர்தலில் ஓட்டளித்ததை மிக பெருமையாக கருதுகிறேன். வாக்காளர்தான், இந்தியாவையும், மாநிலங்களையும் யார் ஆள வேண்டுமென தீர்மானிக்கின்றனர். வேட்பாளர் எப்படி பிரசாரம் செய்தாலும், சுயமாக சிந்தித்து பார்த்து ஓட்டளிக்க வேண்டும்.மோனிஷா, குமார் நகர்.ஒவ்வொரு தேர்தலிலும், பெற்றோர் ஓட்டளிக்க செல்லும் போது, நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்குமோ என்று எதிர்பார்த்திருந்தேன். தற்போது, பெற்றோருடன் வந்து, பிஷப் பள்ளியில் ஓட்டளிப்பது பெருமையாக இருக்கிறது.ஸ்னேகா, புது ராமகிருஷ்ணாபுரம்.கல்லுாரியில், தேர்தல் கமிஷன் சார்பில், 'அம்பாசிடர்' நியமித்து, 18 வயது பூர்த்தியானவர்கள், வாக்காளர் பட்டியலில் சேர வேண்டுமென பிரசாரம் செய்வது பிடித்திருந்தது. அரசியலில் இருந்து இளைஞர்கள் ஒதுங்கி இருக்க கூடாது. ஜெ., போல், பெண்கள் தைரியமாக அரசியலில் ஈடுபட வேண்டும்.கிருபாவதி, கொங்கு மெயின் ரோடு.தேர்தலில், காசு கொடுத்து ஓட்டு வாங்குவது புதிய கலாசாரமாகவே மாறிவிட்டது. வேட்பாளர் கொடுக்கும், 500 ரூபாய்க்காக, நமது உரிமையை விற்கக்கூடாது. யாருக்கும் அஞ்சாமல், நமக்கு பிடித்தவர்களுக்கு தைரியமாக ஓட்டளிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X