பொது செய்தி

தமிழ்நாடு

வாழை மர தோரணம் கட்டப்பட்ட ஓட்டு சாவடி

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்புத்துார்: திருப்புத்துார் தொகுதியில் தேர்தல் ஆணையத்தினரால் மாடல்' ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டது.பெண்கள் மட்டுமே பணியாற்றும் ஓட்டுச்சாவடியாக திருப்புத்துார் நகரில் நா.ம.பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஓட்டுச்சாவடி எண்: 203 அமைக்கப்பட்டிருந்தது. அது போல வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து வாக்காளர்களை
 வாழை மர தோரணம் கட்டப்பட்ட ஓட்டு சாவடி

திருப்புத்துார்: திருப்புத்துார் தொகுதியில் தேர்தல் ஆணையத்தினரால் மாடல்' ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டது.

பெண்கள் மட்டுமே பணியாற்றும் ஓட்டுச்சாவடியாக திருப்புத்துார் நகரில் நா.ம.பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஓட்டுச்சாவடி எண்: 203 அமைக்கப்பட்டிருந்தது. அது போல வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து வாக்காளர்களை வரவேற்கும் ஓட்டுச்சாவடியாக அமைத்திருந்தனர்.ஓட்டுச்சாவடிக்கு முன்பாக வாழை மரம் கட்டப்பட்டிருந்து.

இவற்றை தவிர்த்து ஓட்டுச்சாவடி பணியாளர், பொதுமக்கள் ஆர்வத்துடன் வெளியாத்துாரிலும் ஓட்டுச்சாவடி முன்பாக கொட்டகை போட்டு, நுழைவுவாயிலில் வாழைமரம், தென்னமரக் கீற்றால் தோரணம் கட்டி கல்யாண வீடு வரவேற்பு' போல வாக்காளர்களை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X