பல்லடம்:பல்லடம் தொகுதியில், ஒரு பெண்ணின் ஓட்டு மாறியதால், அவருக்கு 'டெண்டர்' ஓட்டு வழங்கப்பட்டது.பல்லடம் தொகுதி, கரையாம்புதுாரை சேர்ந்த நாகராஜ் மனைவி வசந்தாமணி, 58. நேற்று மதியம், 3:15 மணிக்கு, வசந்தாமணி ஓட்டு போட, ராயர்பாளையம் ஓட்டுச்சாவடிக்கு வந்தார். 'உங்கள் ஓட்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது,' என, அலுவலர்கள் கூறியதால், அதிர்ச்சியடைந்தார்.பின், அவர் 'டெண்டர் ஓட்டு' பதிவிட அனுமதிக்கப்பட்டது. இதேபோல், அருகிலுள்ள பூத்திலும் இளைஞர் ஒருவரின் ஓட்டு, யாரோ பதிவிட்டுள்ளனர். அவரையும் வரவழைத்து 'டெண்டர் ஓட்டு' போட அனுமதித்தால் மட்டுமே இவரையும் அனுமதிப்போம் என, 'பூத் ஏஜன்ட்'கள் ஆட்சேபித்தனர்.வனிதாமணியும், அந்த இளைஞரும் 'டெண்டர் ஓட்டு' பதிவிட அனுமதிக்கப்பட்டனர். இதனால், ராயர்பாளையம் ஓட்டுச்சாவடியில் ஒரு மணி நேரம் பதட்டம் நிலவியது. 'ஓட்டுச்சாவடிக்குள் 'சிசிடிவி' பொருத்தப்பட்டுள்ளது. வனிதாமணியின் பெயரில் ஓட்டளித்தது யார் என்று விசாரிக்கப்படும்' என்று தேர்தல் அலுவலர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE