தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், கொரோனா நோய் பரவலை தடுக்க, வரும், 9ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது.பின்பற்றாத விதிமுறைகள் நோய் பரவலை தடுக்க, 'அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்' என, சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. ஆனால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தலைவர்கள் யாரும், அதை கண்டுகொள்ளவில்லை. மக்கள் கொரோனா விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல், தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு சென்றனர்; பொது இடங்களில் நடமாடினர்.
இதன் காரணமாக, நோய் பரவல் அதிகரித்தது.சில தினங்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 3,000த்தை தாண்டி வருகிறது. சென்னையில் மட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே, நோய் பரவலை தடுக்க, ஏப்., 9 முதல் கட்டுப்பாடுகளை அதிகரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன்படி, வேளாண்துறை சம்பந்தமான பணிகளுக்கு, எவ்வித கட்டுப்பாடும் இருக்காது.
முதல் கட்டமாக, இரவு, 8:00 மணி முதல், காலை, 7:00 மணி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப் படும்.50 சதவீதம் பேர்பூங்காக்கள், கடற்கரை போன்றவை முழுமையாக மூடப்படும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் தவிர, மற்ற கடைகள் மூடப்படும். ஆட்டோ மற்றும் கார்களில், இருவர் மட்டும் ஏற்றி செல்ல வேண்டும்.தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்கப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள், 50 சதவீதம் பேர் மட்டும் பணிக்கு வர அறிவுறுத்தப்படுவர்.
சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளம், வணிக வளாகங்கள் போன்றவை மூடப்படும். வழிபாட்டு தலங்களில், பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என, பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதிக்க உள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:அரசு தரப்பில், ஓட்டுப்பதிவு முடிந்ததும், கட்டுப்பாடு களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், சமூக வலைதளங்களில் பரவிய கட்டுப்பாடுகள் தவறானவை.கட்டுப்பாடுகள் படிப்படியாக அதிகரிக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE