திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.திருப்பூர், மாவட்டத்தில், நேற்று 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்து, 860 ஆக உயர்ந்தது.நேற்று டிஸ்சார்ஜ் ஆன 43 பேர் உட்பட 18 ஆயிரத்து 982 பேர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 651 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை, 227 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.திருப்பூர் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, அரசு தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களிலும் கொரோனா தொற்று வேகமெடுத்து வருவதால், டில்லியில், நாளை பிரதமர் மோடி தலைமையில், இதுகுறித்த முக்கிய ஆலோசனை நடக்க உள்ளது.இதில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அதிக தொற்று ஏற்படும் மாவட்டங்களில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.சட்டசபை தேர்தல் காரணமாக, இதுவரை கொரோனா கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டாத அதிகாரிகள், நேற்றுடன் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்.குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர் போன்ற முக்கிய நகரங்களில், கட்டுப்பாடுகளை விதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE