பொது செய்தி

தமிழ்நாடு

காற்றில் பறந்த  கையுறை வாக்காளர்கள் அலட்சியம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்;வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட கையுறைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல், ஓட்டுச்சாவடிகளில் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாக்காளர்கள் அனைவருக்கும் பாலிதீன் கையுறை வழங்கப்பட்டது. ஓட்டுச்சாவடிக்குள் நுழையும் முன்பே வலது கையில் இக்கையுறைகளை மாட்டிக்கொள்ள வேண்டும். ஓட்டுப்பதிவு முடிந்து வெளியேறிதும் உரிய
 காற்றில் பறந்த  கையுறை வாக்காளர்கள் அலட்சியம்

திருப்பூர்;வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட கையுறைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல், ஓட்டுச்சாவடிகளில் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாக்காளர்கள் அனைவருக்கும் பாலிதீன் கையுறை வழங்கப்பட்டது. ஓட்டுச்சாவடிக்குள் நுழையும் முன்பே வலது கையில் இக்கையுறைகளை மாட்டிக்கொள்ள வேண்டும். ஓட்டுப்பதிவு முடிந்து வெளியேறிதும் உரிய முறையில் அகற்றி அருகில் உள்ள குப்பைத்தொட்டியில் போட வேண்டும். இதுகுறித்து தேர்தல் கமிஷன் பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடைய ஏற்படுத்தியது.ஆனாலும் ஓட்டுச்சாவடிகளில் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் பாலிதீன் கையுறை ரோட்டோரத்தில் அலட்சியமாக வீசப்பட்டு கிடந்தது. இதில் முக கவசங்களும் அடங்கும். அங்கேரிபாளையம் அய்யங்காளிபாளையம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி உட்பட பல இடங்களில், வாக்காளர் பயன்படுத்திய கையுறைகள் ரோட்டில் வீசப்பட்டு கிடந்தாகவும், தேர்தல் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும், மக்கள் புகார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X