பூத் சிலிப் தராததால் வாக்காளர்கள் அவதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பூத் சிலிப்' தராததால் வாக்காளர்கள் அவதி

Added : ஏப் 06, 2021
Share
சென்னை:வாக்காளர் உறுதிச் சீட்டு இல்லாததால், ஓட்டுச்சாவடிகளை கண்டுபிடிக்க, பல இடங்களில் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.கொரோனா நோய் பரவல் காரணமாக, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், இதுவரை இல்லாத அளவிற்கு, 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முறையை விட, 22 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அதிகம்.இதன் காரணமாக, பல இடங்களில், வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டிய

சென்னை:வாக்காளர் உறுதிச் சீட்டு இல்லாததால், ஓட்டுச்சாவடிகளை கண்டுபிடிக்க, பல இடங்களில் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

கொரோனா நோய் பரவல் காரணமாக, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், இதுவரை இல்லாத அளவிற்கு, 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முறையை விட, 22 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அதிகம்.இதன் காரணமாக, பல இடங்களில், வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டிய ஓட்டுச்சாவடி மாறி இருந்தது.

தேர்தல் கமிஷன் சார்பில், வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' எனப்படும், வாக்காளர் உறுதிச் சீட்டு வழங்கப்பட்டது.இப்பணி, 100 சதவீதம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பெரும்பாலானவர்கள் வீடுகளுக்கு, பூத் சிலிப் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், பலர் எந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வேண்டும் என்பது தெரியாமல் தடுமாறினர்.

மேலும், பூத் சிலிப்பில், ஓட்டுச்சாவடி எண் குறிப்பிடாமல், பாகம் எண் மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுதான் ஓட்டுச்சாவடி எண் என்பது தெரியாததால், பலரும் ஓட்டுச்சாவடி எண் எது என தேடி அலைந்தனர். பூத் சிலிப் கிடைக்காதவர்கள், ஓட்டுச்சாவடி அருகே அமர்ந்திருந்த அரசியல் கட்சியினரை தேடிச் சென்று, அவர்களிடம் விசாரித்தனர். சில இடங்களில், கணவரின் பெயர், வரிசை எண், 300ல் இருந்தால், மனைவியின் பெயர், 800ல் இருந்தது. இதனால், பெயர் எங்குள்ளது என்பதை கண்டறிய, வாக்காளர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சியினரும் தடுமாறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X