திருப்பூர்:திருப்பூர், நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில், ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.நேற்று மாலை, 6:30 மணியளவில், கட்சியினர் நடமாட்டம் தென்பட்டது. இதையறிந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர்.அப்போது, ஒரு தரப்பினரை மட்டும் வெளியேற்றாமல், மற்ற கட்சியினரையும் வெளியேற்ற வேண்டும் என, போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கட்சியினர் அனைவரும், பாரபட்சமின்றி வெளியேற்றப்படுவர்; பூத் ஏஜன்டுகள் மட்டுமே, ஓட்டுச் சாவடி மையத்தில் இருக்க அனுமதிக்கப்படுவர் என போலீசார் சமாதானப்படுத்தியதால், கலைந்து சென்றனர். இதனால், ஓட்டுச்சாவடி வளாகாத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE