ஓட்டுச்சாவடி வளாகத்தில் தொண்டர்களால் சலசலப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி வளாகத்தில் தொண்டர்களால் சலசலப்பு

Added : ஏப் 06, 2021
Share
திருப்பூர்:திருப்பூர், நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில், ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.நேற்று மாலை, 6:30 மணியளவில், கட்சியினர் நடமாட்டம் தென்பட்டது. இதையறிந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர்.அப்போது, ஒரு தரப்பினரை மட்டும் வெளியேற்றாமல், மற்ற கட்சியினரையும் வெளியேற்ற வேண்டும் என,

திருப்பூர்:திருப்பூர், நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில், ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.நேற்று மாலை, 6:30 மணியளவில், கட்சியினர் நடமாட்டம் தென்பட்டது. இதையறிந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர்.அப்போது, ஒரு தரப்பினரை மட்டும் வெளியேற்றாமல், மற்ற கட்சியினரையும் வெளியேற்ற வேண்டும் என, போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கட்சியினர் அனைவரும், பாரபட்சமின்றி வெளியேற்றப்படுவர்; பூத் ஏஜன்டுகள் மட்டுமே, ஓட்டுச் சாவடி மையத்தில் இருக்க அனுமதிக்கப்படுவர் என போலீசார் சமாதானப்படுத்தியதால், கலைந்து சென்றனர். இதனால், ஓட்டுச்சாவடி வளாகாத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X