பொது செய்தி

தமிழ்நாடு

பி.எம்.எஸ்., சென்டரில் தொடர் கண்காணிப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:எட்டு தொகுதிகளில் நடந்த, ஓட்டுப்பதிவு விவரங்களை, உடனுக்குடன் சேகரித்து 'அப்லோடு' செய்ய, கலெக்டர் அலுவலகத்தில், பி.எம்.எஸ்., சென்டர் அமைக்கப்பட்டிருந்தது.ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு விவரங்களை, அவ்வப்போது, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்புவது வழக்கம். இம்முறை, உடனுக்குடன் ஓட்டுப்பதிவு விவரம், 'அப்லோடு' ஆகும் வகையில், 'போலிங் மானிட்டரிங் சிஸ்டம்'
 பி.எம்.எஸ்., சென்டரில் தொடர் கண்காணிப்பு

திருப்பூர்:எட்டு தொகுதிகளில் நடந்த, ஓட்டுப்பதிவு விவரங்களை, உடனுக்குடன் சேகரித்து 'அப்லோடு' செய்ய, கலெக்டர் அலுவலகத்தில், பி.எம்.எஸ்., சென்டர் அமைக்கப்பட்டிருந்தது.ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு விவரங்களை, அவ்வப்போது, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்புவது வழக்கம். இம்முறை, உடனுக்குடன் ஓட்டுப்பதிவு விவரம், 'அப்லோடு' ஆகும் வகையில், 'போலிங் மானிட்டரிங் சிஸ்டம்' என்ற மொபைல் ஆப் பயன்படுத்தப்பட்டது.ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுப்பதிவு விவரத்தை, 'ஆப்' மூலம், உடனுக்குடன், 'அப்டேட்' செய்தனர். அது, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதற்காக, கலெக்டரின் உதவியாளர் (தேர்தல்) முரளி, தாசில்தார் முருகதாஸ், தேசிய தகவலியல் மைய பொது மேலாளர் கண்ணன் உள்ளிட்டோர் மேற்பார்வையில், பி.எம்.எஸ்., சென்டர் அமைக்கப்பட்டிருந்தது.இளைஞர்கள், தொகுதி வாரியான விவரங்களை பெற்று, உடனுக்குடன், 'அப்டேட்' செய்தனர். இரண்டு மணி நேர இடைவெளியில், ஓட்டுப்பதிவு விவரத்தை வழங்கினர். துணை தாசில்தார்கள் அடங்கிய குழுவினர், எட்டு தொகுதிகளின் ஓட்டு விவரத்தை சேகரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X