13 வயது சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் சிறுவன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

13 வயது சிறுமியிடம் அத்துமீறல்: 'போக்சோவில்' சிறுவன் கைது

Added : ஏப் 06, 2021
Share
திருப்பூர்:திருப்பூரில், 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, 17 வயது சிறுவனை மகளிர் போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், மங்கலம் ரோட்டை சேர்ந்த, 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். வீட்டு அருகே உள்ள பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 1ம் தேதி இரவு பாட்டி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை.

திருப்பூர்:திருப்பூரில், 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, 17 வயது சிறுவனை மகளிர் போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், மங்கலம் ரோட்டை சேர்ந்த, 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். வீட்டு அருகே உள்ள பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 1ம் தேதி இரவு பாட்டி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில், சென்ட்ரல் போலீசார் சிறுமியை தேடினர்.அதில், அருகே வசித்து வரும், 17 வயது சிறுவனும், சிறுமியும் ஒரு ஆண்டாக பழகி வந்தனர். கடந்த டிச., மாதம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் ரீதியாக சிறுவன் அத்துமீறி, அவரை அழைத்து திருவண்ணாமலை சென்றது தெரிந்தது.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சென்ட்ரல் போலீசார், இருவரையும் கண்டுபிடித்தனர். 'மிஸ்சிங்' வழக்கை, 'போக்சோ' வழக்காக மாற்றம் செய்து, சிறுவனை, தெற்கு மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X