பொது செய்தி

தமிழ்நாடு

'மாதிரி' ஓட்டுப்பதிவு ஏஜன்ட்கள் மகிழ்ச்சி

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளின், 3,343 ஓட்டுச்சாவடிகளிலும் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் அலுவலர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார்நிலையில் வைத்தனர். முதல்கட்டமாக, 'கன்ட்ரோல் யூனிட்'டில், வேறு ஓட்டு பதிவாகவில்லை என்பதை காண்பித்து, மாதிரி ஓட்டுக்கு தயார் செய்யப்பட்டது.வேட்பாளர் ஏஜன்ட்கள், அனைத்து
 'மாதிரி' ஓட்டுப்பதிவு ஏஜன்ட்கள் மகிழ்ச்சி

திருப்பூர்:மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளின், 3,343 ஓட்டுச்சாவடிகளிலும் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் அலுவலர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார்நிலையில் வைத்தனர். முதல்கட்டமாக, 'கன்ட்ரோல் யூனிட்'டில், வேறு ஓட்டு பதிவாகவில்லை என்பதை காண்பித்து, மாதிரி ஓட்டுக்கு தயார் செய்யப்பட்டது.வேட்பாளர் ஏஜன்ட்கள், அனைத்து சின்னங்களுக்கும் ஓட்டுப்பதிவு செய்தனர். மொத்தம், 50 சின்னங்கள் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 'கன்ட்ரோல் யூனிட்'டில் பதிவான ஓட்டுகள், வேட்பாளர் மற்றும் நோட்டா வாரியாக எண்ணி சரிபார்க்கப்பட்டது.அதன்பின், 'கன்ட்ரோல் யூனிட்'டில் இருந்த ஓட்டுகளை அழித்து, ஏஜென்ட்கள் கையெழுத்து அடங்கிய பேப்பர் சீல் வைத்து அரக்கு சீல் வைத்தனர். 'விவி பேட்'டில் இருந்த ரசீதுகளை எடுத்து சரிபார்த்து, அந்த பெட்டிக்கும் அரக்கு சீல் வைத்து மூடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X