பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்த வேட்பாளர்; கவச உடையுடன் ஓட்டுப்பதிவு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை இந்திய கம்யூ., வேட்பாளர் குணசேகரனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று மாலை 6:15 மணிக்கு பாதுகாப்பு கவச உடை' அணிந்து ஓட்டளித்தார்.சிவகங்கை தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் போட்டியிடுகின்றார். தேர்தல் பிரசாரத்தின் போது குணசேகரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மதுரை தனியார்
 கொரோனா பாதித்த வேட்பாளர்; கவச உடையுடன் ஓட்டுப்பதிவு

சிவகங்கை : சிவகங்கை இந்திய கம்யூ., வேட்பாளர் குணசேகரனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று மாலை 6:15 மணிக்கு பாதுகாப்பு கவச உடை' அணிந்து ஓட்டளித்தார்.

சிவகங்கை தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் போட்டியிடுகின்றார். தேர்தல் பிரசாரத்தின் போது குணசேகரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், கொரோனா உறுதியானது.அவர் வீட்டிலேயே தனிமையில் இருந்தார். தொடர்ந்து அவருக்கு சிடி ஸ்கேன்' பரிசோதனையில் 5 சதவீதம் தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் ஓட்டளிக்கலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது.இதையடுத்து நேற்று மாலை 6:15 மணிக்கு சிவகங்கை மன்னர்துரைசிங்கம் அரசு கல்லுாரியில், கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்து ஓட்டளித்து சென்றார். சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி தலைமையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X