பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மின்னணு இயந்திரம் பத்திரம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், தேர்தல் ஆவணம் மற்றும் தளவாடங்கள், ஓட்டு எண்ணிக்கை மையத்தை வந்தடைந்தன.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதியில், ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், இரவு, 7:00 மணிக்கு மேல், பதிவான ஓட்டும், வாக்களித்த வாக்காளர் விவரமும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது. ஏஜன்டுகளிடம் கையொப்பம் பெற்று,
 ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மின்னணு இயந்திரம் பத்திரம்

திருப்பூர்:ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், தேர்தல் ஆவணம் மற்றும் தளவாடங்கள், ஓட்டு எண்ணிக்கை மையத்தை வந்தடைந்தன.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதியில், ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், இரவு, 7:00 மணிக்கு மேல், பதிவான ஓட்டும், வாக்களித்த வாக்காளர் விவரமும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது. ஏஜன்டுகளிடம் கையொப்பம் பெற்று, ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 'சீல்' வைத்து 'பேக்கிங்' செய்யப்பட்டது.மண்டல தேர்தல் அலுவலர்கள், அவற்றை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஒப்படைத்தனர். எல்.ஆர்.ஜி., கல்லுாரி வளாகத்தில், தயாராக இருந்த வரவேற்பு குழுவினர், ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் தளவாடங்களை பெற்றனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'ஸ்ட்ராங் ரூம்' அறையில், அந்தந்த ஓட்டுச்சாவடி எண்ணிடப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டன.கலெக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் எட்டு தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்தடைந்ததை, நள்ளிரவிலும் ஆய்வு செய்தனர்.ஓட்டு எண்ணிக்கை மையத்தில், 'ஸ்ட்ராங் ரூம்'கள், வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று, 'சீல்' வைத்து மூடப்படும். அதன்பின், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X