பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை தொட்டி அமைக்கப்படுமா?

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
அண்ணா நகர் : குப்பை தொட்டி அமைத்து தர, அண்ணா நகர் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அண்ணா நகர் மண்டலம், 100வது வார்டில், 'வி' பிளாக், 11வது தெரு உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசிக்கின்றனர். இவர்களுக்கு, வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பையை கொட்டுவதற்கு என, குப்பை தொட்டி உள்ளிட்ட வசதி அமைத்து தரப்படவில்லை .இதனால், வேறு வழியின்றி,

அண்ணா நகர் : குப்பை தொட்டி அமைத்து தர, அண்ணா நகர் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அண்ணா நகர் மண்டலம், 100வது வார்டில், 'வி' பிளாக், 11வது தெரு உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசிக்கின்றனர். இவர்களுக்கு, வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பையை கொட்டுவதற்கு என, குப்பை தொட்டி உள்ளிட்ட வசதி அமைத்து தரப்படவில்லை .இதனால், வேறு வழியின்றி, அப்பகுதிமக்கள் சாலையோரங்களை, குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பையை, கால்நடைகள் கிளறி, சாலையில் பரப்பி விடுகின்றன.

இதனால், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.இது குறித்து, அப்பகுதிமக்கள் கூறியதாவது:'குப்பை தொட்டியில்லா சென்னை' என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக, சென்னை மாநகராட்சி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு பகுதிகளிலும் குப்பை தொட்டி அகற்றப்பட்டு, துாய்மை பணியாளர்கள், வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கின்றனர்.ஆனால், வீடுகளில் குப்பை வாங்குவது, ஒரு சில இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது. இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X