சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஓட்டுப்பதிவு அலுவலரது பணியை தி.மு.க., பிரமுகர் செய்ததாக புகார் எழுந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு ஓட்டுப்பதிவு தடைபட்டது.
திருப்புத்துார் தொகுதிக்குட்பட்ட சிங்கம்புணரி நகர் ஓட்டுச்சாவடி எண் 73 ல் ஓட்டுப்பதிவு நடந்த போது காலை 11:00 மணிக்கு தி.மு.க., முகவர் கண்ணதாசன், ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன் அமர்ந்து அலுவலர்கள் கொடுக்க வேண்டிய ஓட்டுப்பதிவுக்கான சிலிப்களை அவரே வாக்காளர்களுக்கு கொடுத்து தி.மு.க.,விற்கு ஓட்டுப்போட கூறியதாக தகவல் பரவியது.
அ.தி.மு.க., நகர செயலாளர் வாசு கட்சியினருடன் சென்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். ஓட்டுப்பதிவு தாமதமானதால் பதிவான ஓட்டு எண்ணிக்கையை சரிபார்க்க மட்டுமே அப்பகுதிக்கு சென்றதாக கண்ணதாசன் கூறினார்.
தாசில்தார் திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி சமாதானப்படுத்தினர்.அரை மணி நேரத்துக்குப் பிறகு ஓட்டுப்பதிவு மீண்டும் தொடங்கியது. ஓட்டுப்பதிவு அலுவலர் ராஜா கூறும்போது தனது இருக்கையில் வந்து அவர் அமரவில்லை, அருகில் நின்று பதிவான ஓட்டு எண்ணிக்கையை மட்டுமே சரிபார்த்தார் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE