நெருக்கடியில் ஓட்டுச்சாவடி மையங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெருக்கடியில் ஓட்டுச்சாவடி மையங்கள்

Added : ஏப் 06, 2021
Share
கொளத்தூர் : கொளத்தூர் தொகுதியில், ஒரே இடத்தில் பல ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டதால், கூட்டம் அலைமோதியது. இதனால், வாக்காளர்கள் சிரமம் அடைந்தனர். கொளத்தூர் சட்டசபை தொகுதியில், 424 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இங்கு, நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், ஓட்டுப்போட சென்றோருக்கு, கையுறை வழங்கப்பட்டு, சமுகவிலகல்

கொளத்தூர் : கொளத்தூர் தொகுதியில், ஒரே இடத்தில் பல ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டதால், கூட்டம் அலைமோதியது. இதனால், வாக்காளர்கள் சிரமம் அடைந்தனர்.

கொளத்தூர் சட்டசபை தொகுதியில், 424 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இங்கு, நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், ஓட்டுப்போட சென்றோருக்கு, கையுறை வழங்கப்பட்டு, சமுகவிலகல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், ஜானகிராமன் காலனியில் உள்ள தனியார் பள்ளியில், சமுக விலகலை கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு, ஓட்டுச்சாவடி மையங்களை நெருக்கமாக வைத்திருந்தனர். இந்த ஒரே பள்ளியில், 10 ஓட்டுச்சாவடிகளை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.

இதனால், நெருக்கடியில் வாக்காளர்கள் ஓட்டு செலுத்திச் சென்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:கொரோனா பரவலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் கோட்டை விட்டுள்ளனர். ஏராளமானோர் ஓட்டுப்போட கூடியதால் நெரிசல் ஏற்பட்டது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X