பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு போட உதவிய ம.நீ.ம., இளைஞர்கள்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை, சைதாப்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., - ம.நீ.ம., நாம் தமிழர் மற்றும் அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் களம் கண்டுள்ளனர். ஓட்டுச்சாவடி அருகே வாக்காளர்களுக்கு உதவுவதற்காக, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளுக்கு நிகராக, ம.நீ.ம., கட்சி நிர்வாகிகளும், ஓட்டுச்சாவடிகளுக்கு அருகே, 'டேபிள்' போட்டு அமர்ந்து உதவி செய்தனர்.சைதாப்பேட்டை காரணி தோட்டம்,

சென்னை : சென்னை, சைதாப்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., - ம.நீ.ம., நாம் தமிழர் மற்றும் அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் களம் கண்டுள்ளனர்.

ஓட்டுச்சாவடி அருகே வாக்காளர்களுக்கு உதவுவதற்காக, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளுக்கு நிகராக, ம.நீ.ம., கட்சி நிர்வாகிகளும், ஓட்டுச்சாவடிகளுக்கு அருகே, 'டேபிள்' போட்டு அமர்ந்து உதவி செய்தனர்.சைதாப்பேட்டை காரணி தோட்டம், ஆக்ஸ்போர்டு ஓட்டுச்சாவடியில் சிலர், வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலும், அவர்களுக்கு எங்கு போய் ஓட்டுப் போடுவது என்பது தெரியவில்லை. அவர்களுக்கு, பூத் சிலிப் வழங்கிய அதிகாரிகளோ, பிரதான கட்சி உறுப்பினர்களோ, உதவ முடியாமல் தவித்தனர்.

இந்த சூழ்நிலையில் அவர்களை, ம.நீ.ம., கட்சி இளைஞர்கள் அழைத்து, அவர்களது வாக்காளர் அட்டையில் இருந்த, 'எபிக்' எண்ணை வைத்து, தங்கள் மொபைல் போன் வாயிலாக, எங்கு ஓட்டுச்சாவடி உள்ளது என்பதை கண்டு பிடித்து கூறினர். இது, வாக்காளர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X