பொது செய்தி

தமிழ்நாடு

முகத்தில் சுருக்கம்... கை, கால்களில் நடுக்கம்! ஆனாலும் ஓட்டுப்போட இல்லையே தயக்கம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கோவை:கோவையில், நேற்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும், ஆர்வமுடன் ஓட்டுப்பதிவு செய்தனர்.கோவை, கவுண்டம்பாளையம் தொகுதி, சரவணம்பட்டியில் அமைந்துள்ள ரூபி மெட்ரிக் பள்ளியில், நேற்று காலை முதலே, ஓட்டு பதிவு மும்முரமாக நடந்து வந்தது.மதியம் 12 மணியளவில், வெயில் சுட்டெரித்து கொண்டிருந்த சமயத்திலும் கூட, அசராமல், வயதானவர்கள் வரிசையில்
 முகத்தில் சுருக்கம்... கை, கால்களில் நடுக்கம்! ஆனாலும் ஓட்டுப்போட இல்லையே தயக்கம்

கோவை:கோவையில், நேற்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும், ஆர்வமுடன் ஓட்டுப்பதிவு செய்தனர்.கோவை, கவுண்டம்பாளையம் தொகுதி, சரவணம்பட்டியில் அமைந்துள்ள ரூபி மெட்ரிக் பள்ளியில், நேற்று காலை முதலே, ஓட்டு பதிவு மும்முரமாக நடந்து வந்தது.
மதியம் 12 மணியளவில், வெயில் சுட்டெரித்து கொண்டிருந்த சமயத்திலும் கூட, அசராமல், வயதானவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். 85 வயது மூதாட்டி ஒருவர், ஓட்டுச் சாவடிக்கு காரில் வந்தார்.பின்னர், அங்கிருந்த தன்னார்வலர்களின் உதவியுடன், வீல் சேரில் சென்று ஓட்டு பதிவு செய்தார். அதேபோல், மற்றொரு மூதாட்டியும், மாற்றுத்திறனாளி முதியவர் ஒரு வரும், ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சென்றனர்.முதியவர்களின் வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு, வரிசையில் காத்திருக்க செய்யாமல், உடனே ஓட்டு பதிவு செய்வதற்கான, நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X