பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புத்துாரில் ஒன்றரை கி.மீ., நடந்து ஓட்டளித்த மக்கள்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் தொகுதிக்குட்பட்ட சில கிராமங்களில் அருகில் ஓட்டுப்பதிவு மையம் இல்லாததால் ஒன்றரை கி.மீ., நடந்து வந்து வாக்காளர்கள் வாக்கை பதிவு செய்தனர்.திருப்புத்துார் தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடியில் திருப்புத்துார் தி.மு.க., வேட்பாளர் பெரியகருப்பன் சொந்த ஊரான அரளிக்கோட்டையில் குடும்பத்தினருடன் ஓட்டுப்பதிவு செய்தார். அ.தி.மு.க., வேட்பாளர்
 திருப்புத்துாரில் ஒன்றரை கி.மீ., நடந்து ஓட்டளித்த மக்கள்

திருப்புத்துார் : திருப்புத்துார் தொகுதிக்குட்பட்ட சில கிராமங்களில் அருகில் ஓட்டுப்பதிவு மையம் இல்லாததால் ஒன்றரை கி.மீ., நடந்து வந்து வாக்காளர்கள் வாக்கை பதிவு செய்தனர்.

திருப்புத்துார் தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடியில் திருப்புத்துார் தி.மு.க., வேட்பாளர் பெரியகருப்பன் சொந்த ஊரான அரளிக்கோட்டையில் குடும்பத்தினருடன் ஓட்டுப்பதிவு செய்தார். அ.தி.மு.க., வேட்பாளர் மருது அழகுராஜ் தனது மகன் பிரசன்னாவுடன் காட்டாம்பூர் ஓட்டுச்சாவடியில் பதிவு செய்தார். அ.ம.மு.க., வேட்பாளர் உமாதேவன் கம்பனுாரில் ஓட்டுப்பதிவு செய்தார். காலை 9:00 மணியளவில் ஓட்டுப்பதிவு செய்த வேட்பாளர்கள் ஓட்டுச்சாவடிகளை பார்வையிடச் சென்றனர்.

கிராமங்களில் கட்சியினரிடையே எந்தவித மோதல்' இன்றி பரபரப்புமின்றி அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்தது.பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காலை நேரத்திலேயே ஓட்டுப்பதிவு செய்வதற்கு வந்திருந்தனர். பல ஓட்டுச்சாவடிகளில் கோடை வெயிலிலிருந்து வாக்காளர்களை மர நிழலே பாதுகாத்தது. காவனுாரில் மதியம் 3:00 மணி அளவில் இயந்திர கோளாறால் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.திருப்புத்துார் வேளாண்துறை அலுவலக ஓட்டுச்சாவடியில் மதியம் 2:30 மணி அளவில் வாக்காளர்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்களே வழங்கப்படவில்லை. சில ஓட்டுச்சாவடிகளில் கட்சியினர் ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்களுக்கு ஓட்டுப்பதிவிற்கு பின் டீ,பலகாரம் சாப்பிட டோக்கன் கொடுத்தனர்.

ஓட்டுச்சாவடியில் தான் பதிவு செய்த ஓட்டை அலைபேசியில் படம் எடுத்து வந்ததாக கூறி வாக்காளர் ஒருவர் தனக்கு பட்டுவாடா செய்த கட்சி நிர்வாகி ஒருவரிடம் காண்பித்து வாக்குவாதம் செய்வதை கண்டரமாணிக்கத்தில் பார்க்க முடிந்தது. நகரில் எட்டும் துாரத்தில் ஓட்டுச்சாவடிகள் இருந்தாலும், கிராமங்களில் பல குக்கிராமத்தினர்

ஒரு கி.மீ.க்கு மேல் நடந்து சென்று ஒட்டுப்பதிவு செய்தனர்.முந்தைய தேர்தல்களைப் போல வாகனங்களில் வாக்காளர்கள் அழைத்து வருவது முற்றிலுமாக இல்லை.குறைந்த வயதுடைய வாக்காளர்கள் கடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்தும், தற்போது வாக்காளர் அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டுப்பதிவு செய்ய முடியாமல் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X