தவறாமல் ஓட்டுப்போட்ட ஈரநெஞ்சம் காப்பக முதியோர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தவறாமல் ஓட்டுப்போட்ட ஈரநெஞ்சம் காப்பக முதியோர்

Added : ஏப் 06, 2021
Share
கோவை, ஆர்.எஸ்.புரத்தில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிக்கும் காப்பகத்தில், 30 முதியோர் தங்கியுள்ளனர். இவர்கள் ஓட்டளிக்கும் வகையில், கடந்த, 2019 பார்லிமென்ட் தேர்தலின்போது, அப்போதைய கலெக்டர் ராஜாமணி பெருமுயற்சி எடுத்து, வாக்காளர் அடையாள அட்டை வழங்கினார். அவர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளித்தனர். அதேபோல், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த

கோவை, ஆர்.எஸ்.புரத்தில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிக்கும் காப்பகத்தில், 30 முதியோர் தங்கியுள்ளனர். இவர்கள் ஓட்டளிக்கும் வகையில், கடந்த, 2019 பார்லிமென்ட் தேர்தலின்போது, அப்போதைய கலெக்டர் ராஜாமணி பெருமுயற்சி எடுத்து, வாக்காளர் அடையாள அட்டை வழங்கினார். அவர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளித்தனர். அதேபோல், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில், 30 முதியோரும் நேற்று, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.மகளிர் ஓட்டுச்சாவடியில்நோக்கம் நிறைவேறவில்லைகோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும், தலா ஒரு ஓட்டுச்சாவடி, மகளிர் மட்டும் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. நிர்மலா கல்லுாரியில், பெண் வாக்காளர்கள் மட்டுமே ஓட்டளிக்கும் வகையில், வாக்காளர் பட்டியலை தனியாக பிரிக்காமல் விட்டு விட்டனர். அதனால், பொது ஓட்டுச்சாவடியாக அமைந்தது. அரசியல் கட்சியினரும், பெண் முகவர்கள் நியமிக்காததால், தேர்தல் ஆணையத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.செல்பி; வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்அப்டேட் செய்த இளம்பெண்கள்ஓட்டுப்போட வந்திருந்த இளம்பெண்கள், முதல்முறை ஓட்டுப்போடும் கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் பலரும், ஓட்டுப்பதிவிட்டு வந்ததும், 'மை' வைத்த தனது ஒற்றை விரலை காட்டி, 'செல்பி' எடுத்துக் கொண்டனர். தங்களது 'வாட்ஸ்ஆப்' ஸ்டேட்டஸ் மற்றும் பேஸ்புக்கில், ஜனநாயக கடமையாற்றி விட்டதாக, பதிவேற்றம் செய்தனர்.முதியவரின் ஓட்டுபோட்டது யாருசூலூர் தெற்குப்பள்ளி ஓட்டுச்சாவடியில், ஒரு முதியவரின் ஓட்டை, மற்றொரு நபர் பதிவு செய்ததால், அந்த முதியவர் டெண்டர் ஓட்டு போட்டு சென்றார். பூத் ஏஜன்ட்டுகள் முறையாக செயல்படாததால், தன்னுடைய ஓட்டை வேறு நபர் பதிவு செய்து விட்டதாக நொந்து கொண்டார்.விறுவிறுன்னு துவங்கி பின் மந்தமானதுகிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட, சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, மாச்சம்பாளையம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டு சாவடிகளில், காலை, 10:00 மணி வரை விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. பின் வெயில் அதிகரித்ததால், ஓட்டுப்பதிவில் மந்த நிலை ஏற்பட்டது. அனைத்து பூத்களிலும், மக்கள் உடனுக்குடன் ஓட்டளித்து சென்றனர். ஓட்டுச்சாவடிகளில் பெயரளவுக்குகொரோனா தடுப்பு நடவடிக்கை பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், கொரோனா தடுப்பு முறை முறையாக பின்பற்றப்படவில்லை. காலை, 9:00 மணி வரை வந்த வாக்காளர்களுக்கு மட்டுமே, ஒரு கையுறை வழங்கப்பட்டது. பின் வந்தவர்களுக்கு கையுறை வழங்கப்படவில்லை; உடல் வெப்பம் பரிசோதிக்க வில்லை; சானிடைசர் வழங்கப்படவில்லை.சூலுார் தொகுதியில்புகாரே வரவில்லைசூலூர் சட்டசபை தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. காலை, 7:00 மணிக்கு திடடமிட்டபடி ஓட்டுப்பதிவு துவங்கியது. எந்த பகுதியிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது என புகார்கள் வரவில்லை. மக்கர் செய்த இயந்திரங்கள், உடனுக்குடன் சரி செய்யப்பட்டன.வதம்பச்சேரியில் ஓட்டுபோட்ட அ.தி.மு.க,, வேட்பாளர்சுல்தான்பேட்டை அடுத்த வதம்பச்சேரி ஓட்டுச்சாவடியில், அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி தனது ஓட்டை பதிவு செய்தார். சுல்தான்பேட்டை ஓட்டுச்சாவடியில், ராஜ்யசபா எம்.பி., பாலசுப்பிரமணியம் ஓட்டளித்தார். தேர்தல் பார்வையாளர் ஸ்வரசிஷ்தா சோமவன்ஷி செலக்கரச்சல், கலங்கல், அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு செய்தார்.தேர்தல் பணியாளர்களுக்கு சொல்லலாம் ஒரு சபாஷ்!கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. கடந்த தேர்தல்களில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த, பூத்களில் ஓட்டளித்து வந்தவர்கள் இம்முறை, வேறு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பூத்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.இந்த மாறுதல் விவரம் தெரியாமல் வந்தவர்களிடம், கனிவுடன் பேசி, அவர்களுக்கான மையத்தை தெரியப்படுத்தியதுடன், வாகன வசதியும் ஏற்படுத்தித்தர, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் முன்வந்தனர்.வாகனங்களில் வந்தார்கள்'செட்டப்' வாக்காளர்கள்!கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொண்டாமுத்துார், மேட்டுப்பாளையம், சூலுார், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் தொகுதிகளில் நேற்று மதியத்துக்கு பின், வேட்பாளர்கள் வாக்காளர்களை வாகனங்களில் கூட்டம், கூட்டமாக அழைத்து வந்தனர். இதற்காக டாடா ஏஸ், டெம்போ போன்ற வாகனங்களை, தங்கள் செலவில் ஏற்பாடு செய்திருந்தனர். மதியத்துக்கு பின் மாலை வரை, இதுபோன்று வாக்காளர்களை அழைத்து வந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை. அனைத்து கட்சியினரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டனர்.கோவை வடக்கு தொகுதியில்ஓட்டுப்பதிவு 45 நிமிடம் தாமதம்கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட கல்வீரம்பாளையம், லிங்கனுார், சுண்டப்பாளையம் ஆகிய மூன்று ஓட்டுச்சாவடிகளிலும், இ.வி.எம்., இயந்திரம் பழுதால், 45 நிமிடங்கள் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.கல்வீரம்பாளையத்தில்வாக்காளர்கள் வாக்குவாதம்கல்வீரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஓட்டுச்சாவடியில் இ.வி.எம்., இயந்திரம் பழுதடைந்தது. தேர்தல் அலுவர்கள் இயந்திரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், வாக்காளர்கள் நீண்ட நேரம் வெய்யிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாக்காளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னர் இயந்திரம் பழுது நீக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X