தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

விதி மீறல்: உதயநிதி மீது புகார்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை:'தேர்தல் விதிகளை மீறிய, உதயநிதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் அளித்துள்ள புகார் மனு:சென்னையில் உள்ள, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, தி.மு.க., வேட்பாளர் உதயநிதி, ஓட்டுப்பதிவு தினமான நேற்று,
 விதி மீறல்: உதயநிதி மீது புகார்

சென்னை:'தேர்தல் விதிகளை மீறிய, உதயநிதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் அளித்துள்ள புகார் மனு:சென்னையில் உள்ள, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, தி.மு.க., வேட்பாளர் உதயநிதி, ஓட்டுப்பதிவு தினமான நேற்று, மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட, எஸ்.ஐ.இ.டி., மகளிர் கல்லுாரியில், ஓட்டுச்சாவடி எண் - 19ல் ஓட்டளிக்க சென்றார்.

அப்போது, தி.மு.க., கொடியுடன் கூடிய சூரியன் சின்னத்தை, தன் சட்டையில் குத்தி சென்று, ஓட்டளித்துள்ளார். இது, அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல். பிரசார தடையை மீறிய செயலாகவும், தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகவும் கருதப்படுகிறது.

பிரசாரம் முடிந்த பின், ஓட்டுப்பதிவு நிறைவடையும் வரை, எந்த கட்சிக்கும், வேட்பாளருக்கும், சின்னத்திற்கும், ஓட்டு சேகரிக்கிற விதமாகவோ, ஆதரவு திரட்டும் விதமாகவோ, எந்தவித மான நேர்மறை மற்றும் எதிர்மறை பிரசாரங்களிலும் ஈடுபடக் கூடாது என்பது விதி.

இதை மீறும் வகையில், பொது மக்களையும், வாக்காளர்களையும் திசை திருப்பும் விதமாக, உதயநிதி, தேர்தல் நடத்தை விதியை மீறியுள்ளார். எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.'இது குறித்து விளக்கம் கேட்டு, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, மனு அனுப்பப்பட்டுள்ளது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X