விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி ராதாபுரத்தில் அதிகாரிகள் சமாதானத்தால் தேர்தல் புறக்கணிப்பு வாபஸ் பெற்ற கிராம மக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.
விக்கிரவாண்டி தொகுதி ராதாபுரத்தில் அம்பேத்கர் உருவ போர்டு பிரச்னையில், கோர்ட் உத்தரவை அதிகாரிகள் பின்பற்றா ததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் கடந்த மாதம் அறிவித்தனர்.இந்நிலையில் 2 ம் முறையாக உயர் நீதிமன்றம், அம்பேத்கர் உருவ போர்டு குறித்து விசாரணை செய்து இரண்டு மாத கால அவகாசத்தில் பிரச்னையை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. கடந்த 3ம் தேதி அன்று விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுடை நம்பி, தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நீதிமன்ற உத்தரவு குறித்து தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு இது குறித்து பேசி சரியான முடிவு செய்யப்படும் என கூறினர்.அதனையேற்ற கிராம மக்கள், தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வாபஸ் பெற்று, நேற்று நடந்த தேர்தலில் கிராமத்தில் உள்ள நான்கு ஓட்டுச் சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டு, ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE