கண்ணப்ப நகர் சாலை குண்டக்க மண்டக்க வாகனம் இயக்க முடியாமல் போக்குவரத்தில் சிரமம்| Dinamalar

கண்ணப்ப நகர் சாலை 'குண்டக்க மண்டக்க' வாகனம் இயக்க முடியாமல் போக்குவரத்தில் சிரமம்

Added : ஏப் 06, 2021
Share
குழாய் உடைப்பால் வீணாகுது நீர்மருதமலை ரோடு, வடவள்ளி, சிவாஞ்சலி அருகில், பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால், தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- செல்வம், வடவள்ளி.நாய் தொல்லைமாநகராட்சி, 84வது வார்டுக்கு உட்பட்ட, கெம்பட்டி காலனி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.- சுரேஷ், கெம்பட்டி காலனி.கால்நடைகளால் அவதிமாநகராட்சி, 11வது வார்டுக்கு உட்பட்ட, கிருஷ்ணா நகர்,

குழாய் உடைப்பால் வீணாகுது நீர்மருதமலை ரோடு, வடவள்ளி, சிவாஞ்சலி அருகில், பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால், தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- செல்வம், வடவள்ளி.

நாய் தொல்லைமாநகராட்சி, 84வது வார்டுக்கு உட்பட்ட, கெம்பட்டி காலனி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.- சுரேஷ், கெம்பட்டி காலனி.

கால்நடைகளால் அவதிமாநகராட்சி, 11வது வார்டுக்கு உட்பட்ட, கிருஷ்ணா நகர், நான்காவது வீதியில், ஆடு, மாடுகள் சாலையில் ஆங்காங்கே சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- கார்த்திகேயன், கிருஷ்ணா நகர்.

பிரதான குழாய் உடைப்புசுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1ல், பிரதான குழாய் உடைப்பால், குடிநீர் வீணாக வீதிகளில் ஓடுகிறது.- அருள்முருகன், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1.

விளக்கை அணைப்பதே இல்லைசுந்தராபுரம் - இடையர்பாளையம் ரோடு, ஆதிதிராவிடர் காலனி அருகே உள்ள மின் கம்பத்தில், பகலிலும் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.- பாலசுப்ரமணியன், மாச்சம்பாளையம்.

ரோடு மோசம்மக்கள் அவதிரத்தினபுரி, சங்கனுார் ரோடு, கண்ணப்பன் நகரில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. போக்குவரத்து நிறைந்த இச்சாலையை செப்பனிட வேண்டும்.- சதீஷ்குமார்,

ரத்தினபுரி.

குடியிருக்க அச்சம்மாநகராட்சி, 30வது வார்டுக்கு உட்பட்ட, சரவணம்பட்டி, எல்ஜிபி நகர், கம்பர் வீதி, மூன்றாவது கிராஸில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள, காலி இடம், முட்புதர்களால் சூழப்பட்டுள்ளது. குப்பை கொட்டும் இடமாகவும் மாறி விட்டது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- மோகன்ராஜ், கம்பர் வீதி.

நோ என்ட்ரியில் வருவது நியாயமாகாந்திபுரம், நுாறடி ரோடு, எட்டாவது வீதியில் சாலையின் இருபுறமும், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இத்துடன், கிராஸ்கட் ரோட்டில் இருந்து, நோ என்ட்ரியில் வாகனங்கள் இயக்கப்படுவதால், மேலும் சிக்கல் நிலவுகிறது. போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கண்ணன், பீளமேடு.

கால்வாய் அடைப்புபீளமேடு, ேஹாப்ஸ், காமராஜ் ரோடு, ஸ்ரீராம் நகரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- கணேஷ், ஸ்ரீராம் நகர்.

சாலையை அகலப்படுத்தணும்மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி, தொட்டதாசனுார் - கிட்டாம்பாளையம் வரை உள்ள குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும்.- அருண், தொட்டதாசனுார்.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 62வது வார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லுார், வரதராஜபுரம் மேடு பகுதியில் தெருவிளக்கு எரிவதில்லை.- குருசாமி, வரதராஜபுரம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X