பொது செய்தி

தமிழ்நாடு

மாதிரி ஓட்டுச்சாவடிகளில் பன்னீர் தெளித்து வரவேற்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 11 மாதிரி ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்போட வந்த வாக்காளர்களை பன்னீர் தெளித்து, ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். தேர்தல் ஆணையம், நுாறு சதவீத ஓட்டுப்பதிவை ஏற்படுத்திட தொகுதிக்கு ஒரு மாதிரி ஓட்டுச்சாவடிமையம் அமைக்க உத்தரவிட்டது. அதன்படி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 11 சட்டசபை

விழுப்புரம் : விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 11 மாதிரி ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்போட வந்த வாக்காளர்களை பன்னீர் தெளித்து, ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.

தேர்தல் ஆணையம், நுாறு சதவீத ஓட்டுப்பதிவை ஏற்படுத்திட தொகுதிக்கு ஒரு மாதிரி ஓட்டுச்சாவடிமையம் அமைக்க உத்தரவிட்டது. அதன்படி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் தலா ஒரு மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த ஓட்டுச்சாவடிகளில், ஷாமியானா பந்தல், நுழைவு வாயிலில் வாழை மரம் கட்டி அலங்கரித்தனர்.இதில், விழுப்புரம் தொகுதி காவணிப்பாக்கம், திண்டிவனம் மரகாதம்பிகை ஆரம்ப பள்ளி, சங்கராபுரம் தேவ பாண்டலம், ரிஷிவந்தியம் கடுவனுார் உள்ளிட்ட அனைத்து மாதிரி ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர்களுக்கு பன்னீர் தெளித்து, பூ கொடுத்து தேர்தல் அலுவலர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X