சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'தேஜஸ்' ரயில் தாம்பரத்தில் நிற்குமா?

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
தாம்பரம் : தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, எழும்பூர் -- மதுரை இடையே இயக்கப்படும், தேஜஸ் ரயில், தாம்பரத்தில் நின்று செல்ல, ரயில்வே வாரியம் அனுமதி அளிக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை - மதுரை இடையே இயக்கப்படும், 'தேஜஸ்' ரயில், தென்மாவட்ட மக்களின் வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. சென்னை - மதுரை இடையே, மிகக்குறைந்த நிறுத்தங்களுடன், அதி

தாம்பரம் : தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, எழும்பூர் -- மதுரை இடையே இயக்கப்படும், தேஜஸ் ரயில், தாம்பரத்தில் நின்று செல்ல, ரயில்வே வாரியம் அனுமதி அளிக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை - மதுரை இடையே இயக்கப்படும், 'தேஜஸ்' ரயில், தென்மாவட்ட மக்களின் வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. சென்னை - மதுரை இடையே, மிகக்குறைந்த நிறுத்தங்களுடன், அதி வேகமாக செல்லும் இந்த ரயிலில், பயணியர் ஆர்வத்துடன் பயணிக்கின்றனர். சென்னை எழும்பூரிலிருந்து, காலை, 6:00 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திண்டுக்கல், திருச்சி, ரயில் நிலையங்களில் மட்டும் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, மதியம், 12:15க்கு மதுரை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில், மாலை, 3:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, இரவு, 9:15க்குசென்னை வந்தடைகிறது

.இந்நிலையில், எழும்பூரில் புறப்படும் ரயில், 300 கி.மீ., அப்பால் திருச்சியில் தான் நிறுத்தப் படுகிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் வசிப்பதால், இங்கும் இந்த ரயில் நின்று, பயணியரை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது. இதுவரை, திருச்சிக்கு அடுத்தபடியாக, கொடைரோடு நிலையத்தில் நிறுத்தப்பட்ட இந்த ரயில், திண்டுக்கல் பயணியரின் கோரிக்கையை ஏற்று, கொடைரோட்டிற்கு பதில், திண்டுக்கல்லில் நிறுத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும், கோடிக்கணக்கான பயணியரை சந்திக்கும் தாம்பரத்திலும், தேஜஸ் ரயில் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரயில்வே நிர்வாகத்தால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், பயணியர் மீண்டும் கோரிக்கை, விடுத்துள்ளனர். இது குறித்து, தென்காசியை சேர்ந்த, பயணி, பாண்டியராஜன், 37 கூறியதாவது:�மும்பை- சி.எஸ்.டி., - கர்மாலி' இடையே இயக்கப்படும், தேஜஸ் ரயில், தாதர், தானே ரயில்நிலையங்களிலும், �புதுடில்லி - -லக்னோ' இடையே இயக்கப்படும் ரயில், காசியாபாத் ரயில் நிலையத்திலும் நின்று செல்கின்றன. இந்த ரயில் நிலையங்கள், தேஜஸ் ரயில் புறப்படும் நிலையத்திலிருந்து மிகக்குறைந்த துாரத்தில் உள்ளன. ஆனால், எழும்பூருக்கு அடுத்து திருச்சியில் தான், தேஜஸ் ரயில் நிற்கிறது. ரயில்வே அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X