ஓட்டுச்சாவடிகளில் முகக்கவசம் கையுறை பற்றாக்குறை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்த ஓட்டுச்சாவடிகளில், கவசம் மற்றும் கையுறைகள் பற்றாக்குறை ஏற்பட்டது.தொண்டாமுத்தூர் தொகுதியில், 471 ஓட்டுச்சாவடிகளில், நேற்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர்களுக்கு, வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி, கையுறை வழங்கப்பட்டது.

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்த ஓட்டுச்சாவடிகளில், கவசம் மற்றும் கையுறைகள் பற்றாக்குறை ஏற்பட்டது.தொண்டாமுத்தூர் தொகுதியில், 471 ஓட்டுச்சாவடிகளில், நேற்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர்களுக்கு, வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி, கையுறை வழங்கப்பட்டது. முககவசம் அணியாதவர்களுக்கு, முககவசம் வழங்கப்பட்டது.பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், பகல், 12:30 மணியளவில், முக கவசம் மற்றும் கையுறை பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்கு பின் வந்த வாக்காளர்களுக்கு, வெப்பநிலை பரிசோதித்து, கிருமிநாசினி, கொடுத்துஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, முக கவசம் மற்றும் கையுறை வழங்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X