பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் ஆணைய விதிமுறையை தப்பா 'புரிஞ்சுக்கிட்ட' ஊழியர்கள்! பி.பி.இ.,கிட் அணிந்து 'கடமை'

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஓட்டுப்பதிவு பாதிக்கக் கூடாது என்பதற்காகவும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும், 1,000 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என, பிரிக்கப்பட்டது. கூடுதலாக இருந்த வாக்காளர்களுக்காக, அருகிலேயே, 'ஏ' என்கிற குறிப்புடன், புதிய ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது.சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்பதற்காக, வட்டம் வரைய அறிவுறுத்தப்பட்டு
 தேர்தல் ஆணைய விதிமுறையை தப்பா 'புரிஞ்சுக்கிட்ட' ஊழியர்கள்! பி.பி.இ.,கிட் அணிந்து 'கடமை'

கோவை:கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஓட்டுப்பதிவு பாதிக்கக் கூடாது என்பதற்காகவும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும், 1,000 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என, பிரிக்கப்பட்டது. கூடுதலாக இருந்த வாக்காளர்களுக்காக, அருகிலேயே, 'ஏ' என்கிற குறிப்புடன், புதிய ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது.சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்பதற்காக, வட்டம் வரைய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஓட்டுச்சாவடிகளில் மட்டும் வரையப்பட்டிருந்தது. பெரும்பாலானவற்றில் வரையவில்லை. வரைந்த இடங்களிலும், பொதுமக்களை அதை பின்பற்றவில்லை.தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, சுகாதாரப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டு, ஒவ்வொரு சாவடி முன்பும் இருவர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். சானிடைசர் வழங்கினர்; உடல் வெப்ப நிலை பரிசோதித்தனர்; முக கவசம் அணியாமல் வந்தவர்களை கண்டறிந்து, வழங்கினர்.கொரோனா நோயாளிகள், மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை ஓட்டுப் போடலாம். அத்தருணத்தில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 'பிபிஇ கிட்' என்றழைக்கப்படும் கவச உடை அணிந்து கொள்ள வேண்டும் என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.இதை அலுவலர்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டனர். இருகூர் அரசு பள்ளியில் பணிபுரிந்த அலுவலர்கள் அனைவருமே, காலை, 7:00 மணி முதலே கவச உடை, முக ஷீல்டு அணிந்து பணிபுரிந்தனர். ஆய்வுக்கு வந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X