சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதல் ஓட்டு போட முடியாத என்.எஸ்.எஸ்., மாணவர்கள்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை : ஓட்டுச்சாவடிகளில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதால், பெரும்பாலான என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு, அவர்கள் முதல் ஓட்டை போட முடியாத சூழல் ஏற்பட்டது. சென்னையில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 1,061 இடங்களில், 5,911 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில், 28 ஆயிரத்து, 372 அலுவலர்கள் பணியாற்றினர்.வருகை பட்டியல் கொரோனா பரவலை தடுக்க, வாக்காளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை, கிருமி

சென்னை : ஓட்டுச்சாவடிகளில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதால், பெரும்பாலான என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு, அவர்கள் முதல் ஓட்டை போட முடியாத சூழல் ஏற்பட்டது.

சென்னையில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 1,061 இடங்களில், 5,911 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில், 28 ஆயிரத்து, 372 அலுவலர்கள் பணியாற்றினர்.வருகை பட்டியல் கொரோனா பரவலை தடுக்க, வாக்காளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை, கிருமி நாசினி மற்றும் வலது கைக்கான கையுறை வழங்கப்பட்டது. இதற்காக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், இரண்டு பேர் மற்றும் வரிசையை ஒழுங்குப்படுத்த தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு, 500 ரூபாய் ஊதியம் மற்றும் உணவு படி, 100 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. தன்னார்வலர்கள் வருகை பட்டியல், நேற்று முன்தினம் தயாரிக்கப்பட்டது.ஆனால், நேற்று காலை, பலர் பணிக்கு வரவில்லை. இதனால், தேர்தல் மண்டல அலுவலர்கள் மிகவும் சிரமப்பட்டனர். தெரிந்தவர்கள் வழியாக, புதிய தன்னார்வலர்களை வரவழைத்தனர்.இந்த பணியில், ஏற்கனவே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்தல் பணியில் ஈடுபட்ட பெரும்பாலான அரசு ஊழியர்கள், தபால் ஓட்டு போட்டனர்.தன்னார்வலர்கள்ஓட்டுச்சாவடி அருகில் வசித்த தன்னார்வலர்கள், மதிய நேரத்தில் சென்று ஓட்டு போட்டனர். ஆனால், பெரும்பாலான என்.எஸ்.எஸ்., மாணவர்கள், ஓட்டு போட முடியாத சூழல் ஏற்பட்டது.இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது: கல்லுாரிக்கும், வீட்டுக்கும் பல கி.மீ., துாரம் உள்ளது. கல்லுாரி அருகில் உள்ள ஓட்டுச்சாவடி பணிக்கு அழைத்தனர். வசிப்பது வேறு தொகுதி. தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்படும் என, பேசி அழைத்தனர். எந்த ஏற்பாடும் செய்யவில்லை; நேரடியாக சென்றும் ஓட்டு போட முடியவில்லை. முதல் ஓட்டு போட போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தோம். ஏமாற்றம் தான் கிடைத்தது. ஆனால், கொரோனா தடுப்பு பணிக்காக, எங்கள் ஓட்டை தியாகம் செய்ததாக நினைத்து சமாதானம் அடைந்தோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X