சூலூர்:சூலூர் தொகுதியில், ஒரு ஓட்டுச்சாவடி முழுக்க, முழுக்க பெண் அலுவலர்களே வழிநடத்தினர்.ஒவ்வொரு தொகுதியிலும், ஒரு ஓட்டுச்சாவடியை, முழுக்க பெண் அலுவலர்களை கொண்டு, ஓட்டுப்பதிவை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் பேரூராட்சியில் உள்ள, 173 எண் ஓட்டுசாவடியில், முழுக்க முழுக்க பெண் அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் பரமேஸ்வரி தலைமையில், தனலட்சுமி, கீதா, நந்தினி ஆகிய பெண் அலுவலர்கள், அங்கு நேற்று பணிபுரிந்தனர். மண்டல அலுவலர் ராமச்சந்திரன் அவர்களை வழிநடத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE