நக்சல் நடமாட்ட பகுதிகளில் துப்பாக்கியுடன் காவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நக்சல் நடமாட்ட பகுதிகளில் துப்பாக்கியுடன் காவல்

Added : ஏப் 06, 2021
Share
பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட நக்சல் நடமாட்டம் உள்ள மலையோர கிராம வாக்குச்சாவடிகளில், துப்பாக்கியுடன் துணை ராணுவப்படையினர் காவல் பணியில் ஈடுபட்டனர்.கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சி ஆனைகட்டி, ஜம்புகண்டி, தூமனூர், வீரபாண்டி ஆகிய பகுதிகள் நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள
 நக்சல் நடமாட்ட பகுதிகளில் துப்பாக்கியுடன் காவல்

பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட நக்சல் நடமாட்டம் உள்ள மலையோர கிராம வாக்குச்சாவடிகளில், துப்பாக்கியுடன் துணை ராணுவப்படையினர் காவல் பணியில் ஈடுபட்டனர்.கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சி ஆனைகட்டி, ஜம்புகண்டி, தூமனூர், வீரபாண்டி ஆகிய பகுதிகள் நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று காலை முதல் அப்பகுதி வாக்காளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள், ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.இப்பகுதியில் துணை ராணுவ படையினர், அதிநவீன துப்பாக்கிகளுடன் காவல் பணியில் ஈடுபட்டனர். இப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதால், வனத்துறையினரும் வாக்குச் சாவடியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில், காவல் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X