ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது: மக்கள் புகார்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
அன்னூர்:அன்னூர் ஒன்றியத்தில், இரண்டு இடங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் ஓட்டுப்பதிவு தாமதமானது.அவிநாசி தனி தொகுதிக்குட்பட்ட அன்னூர் ஒன்றியம், எல்லப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, 80ம் எண் ஓட்டுச்சாவடியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது.இதையடுத்து, வேறு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு, அதில் மாதிரி
 ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது: மக்கள் புகார்

அன்னூர்:அன்னூர் ஒன்றியத்தில், இரண்டு இடங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் ஓட்டுப்பதிவு தாமதமானது.அவிநாசி தனி தொகுதிக்குட்பட்ட அன்னூர் ஒன்றியம், எல்லப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, 80ம் எண் ஓட்டுச்சாவடியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது.இதையடுத்து, வேறு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு, அதில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு, 8:15 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.இதனால் ஓட்டுப்பதிவு ஒன்றேகால் மணி நேரம் தாமதமானது. அதுவரை வாக்காளர்கள் காத்திருந்தனர். அன்னூர் பேரூராட்சியில், வடக்கு துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால், 45 நிமிடம் தாமதமாக 7:45 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X