சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அவதுாறு பிரசாரம் மூவர் மீது வழக்கு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
பேரூர்;தி.மு.க., வேட்பாளர் குறித்து, அவதுாறு பிரசாரம் செய்த, மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.தொண்டாமுத்துார் தொகுதியில், தி.மு.க., சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். அவர் குறித்து, நேற்று அதிகாலையில், தொம்பிலிபாளையம் பகுதியில் அவதுாறு நோட்டீஸ் வினியோகித்துள்ளனர்.அது குறித்து, தி.மு.க.,வினர், தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில் அரசனிடம் புகார்

பேரூர்;தி.மு.க., வேட்பாளர் குறித்து, அவதுாறு பிரசாரம் செய்த, மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.தொண்டாமுத்துார் தொகுதியில், தி.மு.க., சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். அவர் குறித்து, நேற்று அதிகாலையில், தொம்பிலிபாளையம் பகுதியில் அவதுாறு நோட்டீஸ் வினியோகித்துள்ளனர்.அது குறித்து, தி.மு.க.,வினர், தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில் அரசனிடம் புகார் அளித்தனர். தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். தெருக்கள் மற்றும் வீடுகளில் இருந்த நோட்டீஸ்களை கைப்பற்றி விசாரித்தனர்.பின்னர், அ.தி.மு.க.,வை சேர்ந்த, குருசாமி, 65, துரைசாமி, 65, ஆகியோர் மீது, நல்லுார் வயல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆலாந்துறையிலும் அவதுாறு நோட்டீஸ்கள் பதுக்கப்பட்டிருந்தன. தேர்தல் பறக்கும் படையினர், ஐந்தாயிரம் நோட்டீஸ்களை பறிமுதல் செய்தனர். அ.தி.மு.க.,வை சேர்ந்த செந்தில்குமார் மீது, ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X