ராய்ப்பூர் :'சத்தீஸ்கரில், நக்சல்களுடன் நடந்த சண்டையின்போது காணாமல் போன, சி.ஆர்.பி.எப்., வீரரை கண்டுபிடிக்க, அனைத்து வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என, போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. பீஜப்பூர், சுக்மா மாவட்டங்கள் எல்லையில் உள்ள வனப் பகுதியில் சமீபத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போஸீஸ் படையினர் அடங்கிய கூட்டுப் படையினர், நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
![]()
|
அப்போது, நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 22 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஒரு வீரரை காணவில்லை. அவர், நக்சல்கள் பிடியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து, சத்தீஸ்கர் மாநில போலீஸ் உயர்அதிகாரிகள் கூறியதாவது:காணாமல் போன, சி.ஆர்.பி.எப்., வீரர் ராகேஷ்வர் சிங் மான்ஹாசை தேடி வருகிறோம். கிராம மக்கள் மற்றும் போலீசுக்கு வழக்கமாக தகவல் அளிப்போரிடம் தகவல் கேட்டுள்ளோம். நக்சல்கள் பிடியில் இருந்தால், இந்த நேரம் புகைப்
படம் அல்லது அறிக்கையை வெளியிட்டிருப்பர்.துப்பாக்கி சண்டைக்கு பின், அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்துள்ளது. அதனால், நக்சல்கள் பிடியில் அவர் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும் அனைத்து வழிகளிலும், அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE