பொது செய்தி

தமிழ்நாடு

கடமையாற்றினார்கள்...கையுறை மறந்தார்கள்!

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்பட்ட கையுறைகள், ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் கண்ட இடங்களில் வீசப்பட்டன.கொரோனா அலை மீண்டும் வீசத்துவங்கியுள்ள நிலையிலும், தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தியது.வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் நுழையும் முன்பு வெப்ப நிலை பரிசோதனையுடன், கைகளுக்கு
 கடமையாற்றினார்கள்...கையுறை மறந்தார்கள்!

கோவை:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்பட்ட கையுறைகள், ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் கண்ட இடங்களில் வீசப்பட்டன.கொரோனா அலை மீண்டும் வீசத்துவங்கியுள்ள நிலையிலும், தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தியது.வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் நுழையும் முன்பு வெப்ப நிலை பரிசோதனையுடன், கைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கையுறையும் வழங்கப்பட்டது. வாக்கு அளித்தவுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட கையுறைகளை, ஓட்டுச்சாவடி வளாகத்திலும், வெளிப்புறங்களிலும் வீசினர்.சிங்காநல்லுார் தொகுதியில், 449 வாக்குச்சாவடிகளில் நேற்று தேர்தல் நடந்தது. இதில், திருச்சி ரோடு ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலை பள்ளியில்அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில், கையுறைகளை வீசிச்சென்று நோய் பரவல் கட்டுப்பாட்டை மறந்தார்கள். பல வாக்குச்சாவடிகளிலும் இந்த அவலம் காணப்பட்டது.கையுறை, மாஸ்க் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் விதமாக, வாக்குச்சாவடிகளில் பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டன. ஆனாலும், வாக்காளர்கள் காண்பித்த அலட்சியப்போக்கு, அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X