பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில், இயந்திரம் பழுதானதால், வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைபட்டது.கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறு அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள, 302ஏ பூத்தில் காலை, 8:05 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. பிறகு, பழுது நீக்கப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.மீண்டும் பழுதானதால், ஆய்வு செய்ய இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் மதியம், 12:20 மணிக்கு மூன்றாவது முறையாக, இயந்திரம் இயங்காமல் போனது. 'விவிபேட்' கருவியை மாற்றி, புதிய கருவியை பொருத்தினர். இதையடுத்து, வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இதனால், 25 நிமிடம் வாக்குப்பதிவு தடைபட்டது.நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே ராக்கிபாளையம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில், 44வது பூத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், 10 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் தொகுதிக்குட்பட்ட, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பழையபுதூர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் காலை, 7:00 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், புதிய இயந்திரத்தில் வாக்குப்பதிவு துவங்கியது. இதனால், 20 நிமிடங்கள் வாக்குப்பதிவு நடக்கவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE