சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவரின் ஓட்டுக்களை போட்ட மர்ம நபர்கள்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
மலுமிச்சம்பட்டி பஞ்..க்குட்பட்ட அம்பேத்கர் நகரில், இருவரது ஓட்டுகள், மாற்று நபர்களால் போடப்பட்டது. இதனால் ஓட்டு போட வந்த, மதன் உள்ளிட்ட இருவர் அதிர்ச்சியடைந்து, வாக்குவாதம் செய்தனர். பலனின்றி திரும்பி சென்றனர்.கட்சியினர் மத்தியில் ஓட்டுக்கேட்பதில் தகராறுகட்சியினர் வாக்குசாவடி அருகே அனுமதிக்கப்பட்ட தூரத்திற்கு முன்பாகவே நின்று ஆதரவு திரட்டினர். அதுபோல் வாக்கு

மலுமிச்சம்பட்டி பஞ்..க்குட்பட்ட அம்பேத்கர் நகரில், இருவரது ஓட்டுகள், மாற்று நபர்களால் போடப்பட்டது. இதனால் ஓட்டு போட வந்த, மதன் உள்ளிட்ட இருவர் அதிர்ச்சியடைந்து, வாக்குவாதம் செய்தனர். பலனின்றி திரும்பி சென்றனர்.கட்சியினர் மத்தியில் ஓட்டுக்கேட்பதில் தகராறுகட்சியினர் வாக்குசாவடி அருகே அனுமதிக்கப்பட்ட தூரத்திற்கு முன்பாகவே நின்று ஆதரவு திரட்டினர். அதுபோல் வாக்கு கேட்கும்போது, மேட்டூர், கார்மேல் சர்ச் பகுதியில் தி.மு.க.,- அ.தி.மு.க.,வினரிடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் கலைந்து போக செய்தனர். பெரும்பாலான இடங்களில் இப்பிரச்னை காணப்பட்டது.ஆட்டோவில் ஏற்றிச் சென்று பண வினியோகம் அமோகம்வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மாலை, 6:00 மணிக்கு மேல் அ.தி.மு.க.,வினர் ஏழு ஆட்டோக்களில் வாக்காளர்களை ஏற்றிச் சென்றனர். பணமும் கொடுத்துள்ளனர். இதனையறிந்த தி.மு.க.,வினர், அவர்களை விரட்டினர். அங்கிருந்து மகாலிங்கபுரம் சென்ற அ.தி.மு.க.,வினர், மீண்டும் அதே வேலையை செய்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், ஓட்டம் பிடித்தனர்.முப்பது நிமிடங்கள் ஓட்டுப்பதிவு 'லேட்'சாரமேடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில், 280,281 ஆகிய பூத்களில், இயந்திர கோளாறு ஏற்பட்டதால், 30 நிமிடங்கள் வாக்குப் பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X