பொது செய்தி

தமிழ்நாடு

பசுந்தேயிலை கிலோ ரூ.19.85 விலை நிர்ணயம்

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
குன்னுார்:தேயிலை வாரியம் சார்பில், இந்த மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு ரூ.19.85 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.குன்னுாரில் உள்ள இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில், சிறு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் ஏல மையங்களில் ஏலம் விடப்படுகிறது. இதன் விலையை அடிப்படையாக வைத்து,

குன்னுார்:தேயிலை வாரியம் சார்பில், இந்த மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு ரூ.19.85 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.குன்னுாரில் உள்ள இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில், சிறு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் ஏல மையங்களில் ஏலம் விடப்படுகிறது. இதன் விலையை அடிப்படையாக வைத்து, பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை, கடந்த, 2015ம் ஆண்டில் இருந்து நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாத ஏல அடிப்படையில், இந்த மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு, கொள்முதல் விலையாக கிலோவுக்கு, 19.85 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்காத தொழிற்சாலைகளை, கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, பாலாஜிகூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X