ஊட்டி:ஊட்டி, குன்னுார், கூடலுார் தொகுதிகளில், முதல் ஓட்டு பதிவு செய்த மாணவர்களின் கருத்து:முத்தான முதல் ஓட்டுகல்லுாரியில் படித்த போது ஓட்டு போட முடியவில்லை. தற்போது தான், எனது முத்தான முதல் ஓட்டு பதிவு செய்த போது, ஜனநாயக கடமையாற்றிய பெருமை கிடைத்தது. யார் வந்தாலும் விவசாயம், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.-ஜி. சிவரஞ்சனி, 23, வெலிங்டன், குன்னுார்.நல்லவர்கள் ஜெயிக்கட்டும்கல்லுாரியில் படித்து வருகிறேன். முதல் முதலில் ஜனநாயக கடமையாற்றிய பெருமை எனக்கு இருந்தது. எந்த பதற்றமும் இல்லாமல் ஓட்டு போட்டேன். நல்லவர்கள் ஜெயிக்கட்டும்.-எஸ். சுவேதா,21, கல்லுாரி மாணவி, கோத்தகிரி.ஓட்டளிப்பதில் கவுரவம்நான் கோவையில் படித்து வருகிறேன். முதல் முறையாக எனக்கு ஓட்டு பதிவு செய்ய கிடைத்த வாய்ப்பை கவுரவமாக கருதுகிறேன். சமுதாய மாற்றத்தில் எனக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்தேன்.-சஞ்ஜனா,21, கல்லுாரி மாணவி, சோலுார், ஊட்டி.வாக்குறுதிக்கு முதல் ஓட்டுகல்லுாரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வருகிறேன். சில கட்சிகள் தெரிவித்துள்ள, பயனுள்ள தேர்தல் வாக்குறுதிகள் மக்களுக்கு பயன்படும் வகையில் இருந்தன. அதில் ஒரு கட்சிக்கு, எனது முதல் ஓட்டை பதிவு செய்துள்ளேன்.-அரித்ரா, 20,- கல்லுாரி மாணவி, ஊட்டி.ஜனநாயக கடமையால் பெருமைஎனது முதல் ஓட்டு பதிவு செய்ய வரிசையில் காத்திருந்தது மகிழ்ச்சியை தந்தது. நாட்டின் ஜனநாயக கடமை ஆற்றியதில் பெருமை அடைகிறேன். இந்த அனுபவம் அடுத்த முறை கிடைக்காது.-ம.ரம்யா, 19, கல்லுாரி மாணவி, காழம்புழா, கூடலுார்.நல்ல தலைவர் வேண்டும்தேர்தல் நாளில் அனைவரும் ஓட்டு போட போகும்போது எனக்கும் ஆசையாக இருந்தது. இன்று நான் சென்று ஓட்டு போட்டபோது, நல்ல தலைவரை தேர்வு செய்ய இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.- மீரா,20,- கல்லுாரி மாணவி, பந்தலுார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE