பொது செய்தி

தமிழ்நாடு

நக்சல் அச்சம் எதிரொலி: எல்லையில் தீவிர பாதுகாப்பு பணி

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
பந்தலுார்;பந்தலுார் அருகே, எல்லையோர பகுதிகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.நீலகிரி மாவட்டம், கூடலுார் சட்டசபை தொகுதியில், 11 இடங்கள் நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு, அங்கு தேர்தலுக்கு முன்பாக, உள்ளூர் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர், அதிரடிப்படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.கடந்த, 5-ம் தேதி தேர்தல் அலுவலர்கள்
 நக்சல் அச்சம் எதிரொலி: எல்லையில் தீவிர பாதுகாப்பு பணி

பந்தலுார்;பந்தலுார் அருகே, எல்லையோர பகுதிகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.நீலகிரி மாவட்டம், கூடலுார் சட்டசபை தொகுதியில், 11 இடங்கள் நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு, அங்கு தேர்தலுக்கு முன்பாக, உள்ளூர் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர், அதிரடிப்படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.கடந்த, 5-ம் தேதி தேர்தல் அலுவலர்கள் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு சென்ற நிலையில், எல்லை பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள், பந்தலுார் அருகே, சேரங்கோடு, கண்ணம்வயல், மழவன் சேரம்பாடி உள்ளிட்ட, 11 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டதுடன், வனத்துறையினர் வனவிலங்கு அச்சத்தை போக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஓட்டுச்சாவடி மையங்களில் ஓட்டளிக்க வந்த வாக்காளர்கள் முழுமையான ஆய்விற்கு பின்னர் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X