ஓட்டுச்சாவடிகளில் சக்கர நாற்காலி இல்லை: வயோதிகர்; மாற்றுத்திறனாளிகள் பரிதவிப்பு

Added : ஏப் 07, 2021
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் சுற்றுவட்டார பகுதி ஓட்டுச்சாவடி மையங்களில் சக்கர நாற்காலி இல்லாத நிலையில், வயோதிகர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துாக்கி செல்லப்பட்டு ஓட்டளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.ஓட்டுச்சாவடிகளுக்கு வரும் வயோதிகர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்களுக்கு சக்கர நாற்காலி வசதி வழங்கப்படுகிறது.இந்நிலையில், நடந்த
 ஓட்டுச்சாவடிகளில் சக்கர நாற்காலி இல்லை: வயோதிகர்; மாற்றுத்திறனாளிகள் பரிதவிப்பு

பந்தலுார்:பந்தலுார் சுற்றுவட்டார பகுதி ஓட்டுச்சாவடி மையங்களில் சக்கர நாற்காலி இல்லாத நிலையில், வயோதிகர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துாக்கி செல்லப்பட்டு ஓட்டளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.ஓட்டுச்சாவடிகளுக்கு வரும் வயோதிகர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்களுக்கு சக்கர நாற்காலி வசதி வழங்கப்படுகிறது.இந்நிலையில், நடந்த தேர்தலில், வயோதிகர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தபால் ஓட்டு வழங்கப்பட்டது. ஆனால், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் இதனை முழுமையாக நிறைவேற்றாத நிலையில், பலரும் நேற்று ஓட்டுச்சாவடியில் வந்து ஓட்டளித்து சென்றனர். இவர்களுக்கு கடந்த காலங்களை போன்று சக்கர நாற்காலி வசதிகள் இல்லாத நிலையில், உறவினர்கள் மற்றும் இளைஞர்கள் துாக்கி வந்தும் கைத்தாங்கலாக, அழைத்து வந்தும் ஓட்டளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால், பல்வேறு ஓட்டுச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயோதிகர்கள், ஓட்டு சாவடி நிலைய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்து பின்னர் ஓட்டளித்து சென்றனர். இதனால், பல இடங்களில், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X